நெகடிவ் கதாபாத்திரத்திற்காக ஐ எம் வெயிட்டிங்.. நடிகை ரெஜினா!

சென்னை: வில்லி போன்ற நெகடிவ் கதாபாத்திரத்திற்காக தான் காத்திருப்பதாக நடிகை ரெஜினா கூறியுள்ளார்.

கண்டநாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் ரெஜினா. அந்த படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லை.

இதையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படம் மூலம் ஓரளவு தெரிந்த முகமானார் ரெஜினா. இதுவரை தமிழ், தெலுங்கு மொழிகளில் 25 படங்களுக்கு மேல் நடித்தாலும் இவரால், பிரம்மாண்ட மாஸ் ஹிட்டை இவரால் கொடுக்கவில்லை.

 தமிழில் ஏமாற்றம்

தமிழில் ஏமாற்றம்

தமிழில் "சரவணன் இருக்க பயம் ஏன், "சந்திரமௌலி, ராஜதந்திரம் "போன்ற படங்களில் நடித்தார். இந்தப்படங்கள் நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இவர், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார். இதனால் , தெலுங்கு பக்கம் தன் பார்வையை திருப்பி உள்ளார் ரெஜினா. தெலுங்கில் கவனம் செலுத்தும் இவர், நாயகியாக, சாக்லேட் பொம்மைப்போல வலம் வருது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து போர் அடித்து விட்டதாக கூறியுள்ளார்.

 நெகடிவ் ரோல்

நெகடிவ் ரோல்

பெயர் சொல்லும் அளவுக்கு நெகடிவ் கேரக்டர் கிடைத்தால் நன்றாக, நடிப்பை வெளிப்படுத்தி பெயர் எடுக்க முடியும் என்று அந்த மாதிரியான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ரெஜினா. அதிலும் படம் முழுக்க வரும் வில்லி, திரில்லர், படு கவர்ச்சி போன்ற யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

 அழகான நாயகி

அழகான நாயகி

பொதுவாகவே நடிகைகள் அனைவரும் ஒல்லியாக இருப்பதையே விரும்புவார்கள். அது போல் இவரும் ஸ்லீக் அண்ட் ஸ்லிம்மான நடிகைகளில் ஒருவர். எந்த உடை அணிந்தாலும் இவருக்கு அழகாக, கச்சிதமாக இருப்பது இவருக்கு கூடுதல் பலம் தான். ஹிட்டான சில நடிகைகளை விட இவர் அழகாக தான் இருக்கிறார் இருந்தாலும் வாய்ப்புகள் தான் வரவில்லை.

 உங்களுக்கு செட்டாகல

உங்களுக்கு செட்டாகல

எப்போதும் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும், ஹோம்லி லுக்குடனும் இருக்கும் இவருக்கு நெகடிவ் கதாபாத்திரம் செட் ஆகுமா என்ற கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இவரை தேடிவரும் தயாரிப்பாளர்களிடம் இவரது எதிர்பார்ப்பை கூறியவுடன் இது உங்க பேஸ்க்கு செட் ஆகாது என்று கூறி நடையை கட்டிவிட்டனர் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X