Regina - அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகேயா?.. என் மேனேஜர் உங்களிடம் பேசுவார்.. சீக்ரெட் சொன்ன நடிகை

சென்னை: Regina (ரெஜினா) நடிகை ரெஜினா தன்னிடம் ஒருவர் அட்ஜெட்மெண்ட் குறித்து பேசியதாக தெரிவித்திருக்கிறார்

ரெஜினா தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சைடு ஆர்ட்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமாகினர். அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

Actress Regina Open Talks about Adjustment Issue in Film Industry

பெரிதான வாய்ப்பு இல்லை: அந்தப் படத்தின் மூலம் அடையாளம் கிடைத்ததை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படிதான் அமைந்தது. அதன்படி அவர் ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, தலைவியில் கெஸ்ட் ரோல் என படங்களில் நடித்தார். ஆனால் அவற்றில் ராஜதந்திரம், மாநகரம் தவிர்த்து மற்ற படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை. அவர் கடைசியாக தமிழில் கருங்காப்பியம் படத்தில் நடித்தார். மேலும் அவரது நடிப்பில் பார்டர், ஃப்ளாஷ்பேக், சூர்ப்பனகை ஆகிய படங்கள் தமிழில் வெளியாகவிருக்கின்றன.

அட்ஜெஸ்ட்மெண்ட்: இந்நிலையில் சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் நடிகை ரெஜினா. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "என் திரையுலக வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் அட்ஜெஸ்ட்மெண்ட் தொடர்பான அனுபவத்தை சந்தித்திருக்கிறேன். அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யலாமா என தொலைபேசியின் மூலம் ஒருவர் என்னிடம் கேட்டார்.

அர்த்தம் புரியவில்லை: அதற்கான அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை. சரி சம்பளத்தில்தான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யலாமா என என்னிடம் கேட்கிறார் போல என நினைத்துக்கொண்டேன். இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது எனக்கு வயது 20. அந்த நபரிடம் இதுகுறித்து எனது மேனேஜர் உங்களிடம் பேசுவார் என்றேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது அவர் வேறு வகையான அட்ஜெஸ்ட்மெண்ட்டை பேசுகிறார் என்று.

Actress Regina Open Talks about Adjustment Issue in Film Industry

பின்னர் நடக்கவில்லை: என் வாழ்க்கையில் அந்த சம்பவத்துக்கு பிறகு தனிப்பட்ட முறையில் அதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததில்லை. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டிருப்பார்கள். அது உண்மையாகக்கூட இருக்கலாம். இல்லை பொய்யாகக்கூட இருக்கலாம். நிறைய பெண்கள் கதைகளை உருவாக்க பொய்யையும் சொல்வார்கள். ஆனால் உண்மை அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்" என்றார்.

மனம் திறக்கும் நடிகைகள்: சினிமாவில் அட்ஜெட்மெண்ட் பிரச்னை பல வருடங்களாக இருந்துகொண்டேதான் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர்வரை இதுகுறித்து பெரும்பாலான நடிகைகள் மனம் திறந்து பேசியதில்லை. சமீபகாலமாக பலரும் இதுதொடர்பாக பேசிவருகிறார்கள். நடிகை நயன்தாராக்கூட தன்னிடமும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X