மொத்த அழகையும் காட்டியாச்சு..தண்ணீருக்குள் ஜலபுல ஜங்கு..ரெஜினாவின் ஹாட் போஸ்!
சென்னை : நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது, பின்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றி உள்ளார். இணையத்தில் அந்த வீடியோ பல லைக்குகளை பெற்று டிரண்டாகி வருகிறது.
நடிகை ரெஜினா, தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

ரெஜினா கசாண்ட்ரா.
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ரெஜினா கசாண்ட்ரா. இதையடுத்து, பிரசன்னா, லைலா நடித்த கண்டநாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற திரைப்படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் இவரை அனைவருக்கும் தெரியும்படி செய்தது.

ஏராளமான படங்களில்
தற்போது தமிழ், தெலுங்கு,கன்னட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் 1945 திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஓரளவிற்கு பெயர் எடுத்தது. தற்போது கருங்காப்பியம், சூர்ப்பனகை, பிளாஷ் பேக், பார்டர் என தமிழில் மட்டும் 4 படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

தண்ணீருக்குள் ஜலபுல ஜங்கு
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா கசாண்ட்ரா, தண்ணீருக்குள் நின்று கொண்டு தனது பளபளக்கும் முதுகை மொத்தமாக காட்டி ரசிகர்களை சூடேத்தி உள்ளார். அந்த வீடியோ பதிவான சிறிது நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இதுதான் ஜலபுல ஜங்கு சாங்கா என கிண்டலடித்து வருகின்றனர்.
காதலிக்கிறார்களா?
நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் பிறந்த நாளில், நடிகர் சுதீப் கிஷன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, ஹாப்பி பர்த்டே பாப்பா.. ஐ லவ் யூ..,உனக்கு எப்போதும் நல்லதே நடக்கும்.. இதே மாதிரி ஹாப்பியா இரு என்று பதிவிட்டு இருந்தார். இதனால்,இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.


Click it and Unblock the Notifications











