பூமர் ஆன்ட்டினு சொல்றாங்க.. கவலையெல்லாம் இல்லை.. பிரபல நடிகை ஓபன் டாக்
சென்னை: ரேகா நாயர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தனது மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடக்கூடிய சுபாவம் உடைய ரேகா நாயர்; பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை ஒரு கை பார்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
சின்னத்திரையில் தோன்றி பிறகு வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ரேகா நாயர். ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு அவர் திரைத்துறையில் அறிமுகமானாலும் பெரும்பாலும் சைடு ரோல்களே அவருக்கு கிடைத்தன. இருப்பினும் கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னுடைய திறமையை காண்பித்துக்கொண்டே இருந்தார்.
இரவின் நிழல் ரேகா: இப்படி துணை கதாபாத்திரங்களில் நடித்தக்கொண்டிருந்த ரேகா நாயருக்கு இரவின் நிழல் பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்தப் படத்தை பார்த்திபன் ஒரே ஷாட்டில் இயக்கியிருந்தார். வித்தியாசமாக எடுக்கப்பட்டிருந்தாலும் படம் சரியாக போகவில்லை. அதேசமயம் அப்படத்தில் ரேகா நாயர் நிர்வாண காட்சியில் நடித்தது பெரும் விவாதப்பொருள் ஆனது. விவாதம் ஆனாலும் அந்தக் காட்சி ஆபாசமானதாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பற்றவைத்த பயில்வான்: சூழல் இப்படி இருக்க எப்போதும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவதூறாக பேசுவதை வேலையாக வைத்திருக்கும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இரவின் நிழல் திரைப்படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததை விமர்சித்தார். இந்த விவகாரம் முற்ற; அவர் நடைபயிற்சி செல்லும்போது ரேகா நாயர் பயில்வானை மறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு சம்பவம் செய்துவிட்டார்.
மனதில் பட்டதை பேசும் ரேகா: மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் வழக்கம் உடைய ரேகா நாயர் ஒரு பேட்டியில்கூட பயில்வான் ரங்கநாதன் இறந்துபோனால் நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். நான் அவரிடம் அப்படி பேசியதற்கு பல பெரிய நடிகர்களும், நடிகைகளுமேகூட என்னை பாராட்டினார்கள் என பேசியிருந்தார். இதற்கிடையே அவர் ஒரு எம்.எல்.ஏவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிகொண்டே இருந்தது. அதனை திட்டவட்டமாக மறுத்தார் ரேகா.
ரேகாவின் பேட்டி: இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், "நான் இலக்கிய கூட்டங்களுக்கு புடவை அணிந்து செல்வேன். சாதாரணமாக கடைகளுக்கு செல்லும்போது சுடிதார் அணிவேன். யோகா செய்யும்போது பேண்ட், ஷர்ட் போடுவேன். இப்படி சூழலுக்கேற்ப உடைகள் அணிவதுதான் எனக்கு பொருத்தமாக இருக்கிறது. பேண்ட், ஷர்ட் போட்டால் தலையில் பூ வைக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
பூமர் ஆன்ட்டி: ஆனால் அப்படி சொல்வது தவறு. நமக்கு விருப்பப்பட்டால் பூ வைத்துக்கொள்ளலாம். அப்படி செய்வதால் என்னை பூமர் ஆன்ட்டி என்று சொல்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வதை நினைத்து நான் கவலைப்படுவதில்லை. ஆண்களுக்கு சப்போர்ட்டாக பேசினால் என்னை எதிர்க்கிறார்கள். நான் என்ன ஆண்களின் ஓட்டை வைத்து தேர்தலிலா வெல்லப்போகிறேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











