Rekha Daughter: நடிகை ரேகாவின் மகளுக்கு தடபுடலாக நடந்த திருமணம்.. களைகட்டிய கொண்டாட்டம்!

சென்னை: 80்ஸ் கால கட்டத்தில் நாயகியாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ரேகா, தற்போது இவர், கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இவரின் மகள் அனுஷாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், மெஹந்தி கொண்டாட்ட போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

பாரதிராஜா இயக்கிய 'கடலோரக் கவிதைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா. முதல் படத்திலேயே ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படதிதை தொடர்ந்து, புன்னகை மன்னன், செண்பகமே செண்பகமே, என் பொம்ம குட்டி அம்மாவிற்கு, பாட்டுக்கு நான் அடிமை, ராசாவே உன்னை நம்பி என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்தார். ரேகா பல எத்தனை படங்களிலும் நடித்திருந்தாலும், அவரது முதல் படமான 'கடலோரக் கவிதைகள்' படத்தை யாராலும் மறக்க முடியாது.

Rekha daughter marriage
Photo Credit:

நடிகை ரேகா: சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த இவர், சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது ஜார்ஜ் ஹேப்பிஸ் என்பவரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷா என்கிற மகள் இருக்கிறாள். திருமணத்திற்கு பின் சினிமாவில் சிறிது காலம் தலைகாட்டாமல் இருந்த ரேகா மீண்டும் ஸ்ரீகாந்த், பூமிகா நடித்த ரோஜா கூட்டம் திரைப்படத்தில் பூமிகாவின் முரட்டுத்தனமான அம்மாவாக நடித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார்.

மகளுக்கு திருமணம்: அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர், விஜய் டிவியில் அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைத்து அசத்தினார். அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். இந்நிலையில், நடிகை ரேகாவின் மகள் அனுஷா கடந்த வாரம் தடபுடலாக திருமணம் நடந்துள்ளது. அந்த போட்டோக்களை நடிகை ரேகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால், ரேகாவின் மகளுக்கு திருமணம் எப்போது நடந்தது, மணமகன் யார், என்ன செய்கிறார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. நடிகை ரேகா பெரிய பிரபலமாக இருந்தாலும் மகளின் திருமணத்தை பற்றி அறிவிக்காமல், திருமணம் நடந்த முடிந்த பின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். எது எப்படி இருந்தாலும் ரசிகர்கள் ரேகாவின் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X