Reshma: உண்மையிலேயே சந்தனக்கட்ட தான்.. ரேஷ்மாவின் ஆட்டத்தை பார்த்து உருகிய ஃபேன்ஸ்!
சென்னை: சோசியல் மீடியாவில் எந்த பாடல் டிரெண்டாகிறதோ அந்த பாடலுக்கு ஆட்டம் போடுவது நடிகைகளின் வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராமில்,
இணையத்தில் சக்கை போடு போட்டு வரும் ஆத்தி சந்தனகட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டு இருக்கிறார். இதைப்பார்த்த இளசுகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், கருணாஸ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மே1ந் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணாடி பூவே பாடலும், ஆத்தி சந்தனகட்ட பாடலும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த பாடலை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ரெட்ரோ: இணையத்தில் ரவுண்டி கட்டி வரும் இந்த 'கனிமா' பாடலுக்கு ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வரும் நிலையில், அண்மையில் ஊடகம் ஒன்றில் பேசிய சந்தோஷ் நாராயணன், சிம்பு நடித்த 'மன்மதன்' படத்தில் வரும், 'என் ஆசை மைதிலியே' என்ற பாடலின் இன்ஸ்பிரேஷன் தான் 'ரெட்ரோ' படத்தில் வரும் 'கனிமா' பாடல் என்று கூறியிருந்தார். இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாட, விவேக் பாடல் வரியை எழுதியுள்ளார். பட்டிதொட்டி எங்கும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து வரும் இந்த பாடலுக்கு இணையத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போட்டு பாடலை மேலும் வைரலாக்கி வருகின்றனர்.

ரேஷ்மா பசுபுலேட்டி: இந்த பாடலுக்கு நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, ஆட்டம் போட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து... ஆத்தி.. உண்மையிலேயே சந்தனக்கட்ட தான் என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக நுழைந்த ரேஷ்மா பசுபுலேட்டி, சின்ன சின்ன ரோலில் நடித்து இன்று நல்ல நடிகை என பெயர் எடுத்துள்ளார். விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில், ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து இருந்தாலும், இவரின் புஷ்பா கதாபாத்திரம் பெரிய அளவில் பிரபலமானது. அந்த படத்தை தொடர்ந்து சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் படு பிஸியாக இருக்கிறார் ரேஷ்மா. தற்போது இவர், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற ரோலில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில், அதிரடி மாமியாராக கலக்கி வருகிறார். அது மட்டுமில்லாமல், அடுத்தடுத்த படத்திலும் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார் ரேஷ்மா.
நடிகை ரேஷ்மா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், திடீரென உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். தற்போது, கடுமையாக உடற்பயிற்சி செய்து கிட்டத்தட்ட 12 கிலோ வரை குறைத்திருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்ததாக ரேஷ்மா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
https://www.instagram.com/reel/DI_XheZStzv/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==


Click it and Unblock the Notifications











