காத்தோட்டமா இருக்குனு இப்படியா? புடவையில் ஆட்டம் போட்ட ரேஷ்மா.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
சென்னை:வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர், விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி தொடரில், ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், மொட்டை மாடியில் புடவையில் ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
சூரி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்த ரேஷ்மாவுக்கு அந்த கதாபாத்திரம் நன்றாக கை கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகுதான் யாருப்பா இந்த புஷ்பா என்று ரசிகர்கள் பலர் இணையத்தில் தேடத் தொடங்கினார்கள். அந்த படத்திற்கு பின் விஜய் டிவியில் பாக்யலட்சுமி சிரீயலில் கோபியிடம் ஏமாந்து போகும் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்த புஷ்பாவா இது என அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார். அதன்பின் கதை போக போக வில்லியாக மாறிய இவர் தற்போது கோபியை மிரட்டு மிரட்டு என்று மிரட்டி வருகிறார். இந்த சீரியல் மட்டுமில்லாமல், இதுதவிர ஜீ தமிழில் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். மேலும், கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 4ல் நடுவராகவும் இருந்து வருகிறார்.
நச் பதில்: துணிச்சலான தைரியமான பெண்ணான இவர், இணையத்தில் இணையவாசிகள் கேட்கும் கேள்விக்கு நெற்றியில் அடித்தது போல பதில் அளித்து வருகிறார். அண்மையில் ஒரு நெட்டிசன், அழகாக இருந்த நீங்க, ஆப்ரேஷன் செய்து குரங்கு மாதிரி ஆகிவிட்டீர்கள் என கமெண்ட் அடிக்க, சினிமாவில் நான் 13 வருடத்திற்கு மேலாக இருப்பதால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு நன்றாக தெரிகிறது. பெண் வயதிற்கு ஏற்றபடி உடல் எடை அதிகரிக்கும், சிலருக்கு குறையும் இது இயற்கையானது என்று அந்த இணையவாசியை விளாசி உள்ளார்.
காத்துவாங்கும் ரேஷ்மா: இந்நிலையில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போஸில் இருக்கும் போட்டோவை அப்லோடு செய்வது, வீடியோவை அப்போடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, மொட்டை மாடியில், சிவப்பு நிற புடவை கட்டிக்கொண்டு, ஏற்ற இறக்கத்தோடு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு இவரின் தீவிர ரசிகர்கள் மறக்காமல் லைக்குகளை குவித்து வருகின்றனர். நடிகை ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒன்று புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











