Reshma: ஜூம் பண்ண அவசியமே இல்ல.. திணறடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!
சென்னை: நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரிக்கு கெத்தான மாமியாராக நடித்து வருகிறார். சீரியலில், புடவை, தலை நிறைய பூ வைத்துக்கொண்டு வலம் வரும் நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி, நிஜத்தில் இணையமே திகைத்துப்போகும் அளவிற்கு மார்டன் உடையில் உள்ளார்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என பரபரப்பாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி, அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர், தெலுங்கு சினிமாவில் பல நல்ல படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ஆவர். இவர் 2015ம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன் சீரியல்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துவந்த இவர், விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும், படம் முழுவதும் புஷ்பா .. புஷ்பா என இவரை பற்றித்தான் பேச்சாக இருக்கும். ரேஷ்மாவுக்கு இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி: ரேஷ்மா பசுபுலெட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதா என்கிற கதாபாத்திரத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து வருகிறார். பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த சீரியலைத் தொடர்ந்து ஜீ தமிழ் டிவியில் சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், கார்த்திக் ராஜ் நடித்த கார்த்திகை தீபம் சீரியலில், நான்கு பெண்களுக்கு அம்மாவாகவும், கார்த்திக் ராஜாவிவிற்கு மாமியாராகவும் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில், இழுத்துப் போத்திக் கொண்டு வலம் வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராமில் மார்டன் உடையில், முன்னழகை எடுப்பாக காட்டி, தலைமுடியை காற்றில் பறக்கவிட்டு அட்டகாசமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
12 கிலோ வரை குறைத்தார்: ரேஷ்மா பசுபுலெட்டி கார்த்திகை தீபம் சீரியல் மட்டுமில்லாமல், புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை ரேஷ்மா, பிஸ் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விந்த பின், உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனால் பலரும் இவரை உருவ கேலி செய்தனர். இதுகுறித்து பேசிய ரேஷ்மா, எனக்கு சில பிரச்சனைகள் இருந்ததால் திடீர் என்று உடல்எடை கூடிவிட்டது. இதன்பிறகு உடற்பயிற்சி செய்து செய்து கிட்டத்தட்ட 12 கிலோ வரைக்கும் குறைத்து இருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், ஜிம்மில் தான் இருப்பேன். 9 மாதமாக பல விஷயத்தை சாப்பிடாம தவிர்த்து வந்து இருக்கேன், முக்கியமாக சர்க்கரை. அதனால் தான் என்னால் 12 கிலோ வரை உடல் எடை குறைக்க முடிந்தது என கூறியுள்ளார். தற்போது ரேஷ்மா நன்றாக உடை எடை குறைத்து அழகாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











