Reshma Pasupuleti: சீரியலில் மாமியார்.. நிஜத்தில் கவர்ச்சி புயல்.. ரேஷ்மா பசுபுலேட்டியின் போட்டோஸ்!
சென்னை: நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கெத்தான மாமியாராக இழுத்துப்போத்திக்கொண்டு நடித்து வருகிறார். ஆனால், நிஜத்தில் இணையமே திகைத்துப்போகும் அளவிற்கு மார்டன் உடையில் ஆட்டம் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன மாமியாரே இதெல்லாம் தேவையா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என பரபரப்பாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி, அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர், தெலுங்கு சினிமாவில் பல நல்ல படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ஆவர். சினிமா மீது இருந்த ஆசையால் சின்னத்திரைக்கு வந்த இவர், சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் 2015ம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானர்.

ரேஷ்மா பசுபுலெட்டி: இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும், படம் முழுவதும் புஷ்பா .. புஷ்பா என இவரை பற்றித்தான் பேச்சாக இருக்கும். ரேஷ்மாவுக்கு இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மாமியாரா இப்படி: ரேஷ்மா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதா என்கிற கதாபாத்திரத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து வருகிறார். இந்த சீரியலைத் தொடர்ந்து ஜீ தமிழ் டிவியில் சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், கார்த்திக் ராஜ் நடித்த கார்த்திகை தீபம் சீரியலில் , நான்கு பெண்களுக்கு அம்மாவாகவும், கார்த்திக்கிற்கு மாமியாராகவும் நடித்து வருகிறார். இப்படி இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும், ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராமில் மார்டன் உடையில் கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், சீரியலில்தான் மாமியார், நிஜத்தில் மார்டன் கேர்ள் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











