மியா அலிகான் மாறிய ரேஷ்மா பசுபுலேட்டி.. ரசிகர்களை சுட்டி இழுக்கும் அழகு!
சென்னை : நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கண்ணாடி அணிந்து கொண்டு மியா அலிகான் போல விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் அவரை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.
விமான பணிப்பெண்ணான ரேஷ்மா பசுபுலேட்டி, சினிமா மீது இருந்த ஆர்வத்தால், சன் தொலைக்காட்சியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அதன் பின், வாணி ராணி, மரகத வீணை, காயத்ரி, பாக்கியலட்சுமி போன்ற பல சீரியல்களில் முக்கியமான வேடத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி
சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து, எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக புஷ்பா என் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு இது முதல் படம் என்றாலும், முதல் படத்திலேயே ரேஷ்மாவின் கேரக்டர் பெயர் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த படத்தில் புஷ்பா புருஷன் என்ற வசனம் தற்போது வரை பிரபலமாகவே உள்ளது.

விலங்கு வெப் சிரீஸ்
புஷ்பா புருஷன் வசனத்தின் மூலம் பிரபலான ரேஷ்மா தற்போது கிச்சா பொண்டாட்டியாக பிரபலமாகி உள்ளார். நடிகர் விமல் நடிப்பில் பிரசாத் பாண்டிராஜ் இயக்கிய வெப் சிரீஸ் விலங்கு கிச்சாவின் மனைவியாக நடித்துள்ளார். இந்த தொடரில் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

கிச்சா பொண்டாட்டி
கிச்சாவின் மனைவியாக இந்த படத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்துள்ளார். கணவர் பால் வாங்க கடைக்கு போகும் நேரத்தில் வீட்டிற்கு வரும் ஆண்களுடன் உல்லாசமாக இருப்பது போல நடித்து, அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஒரு போல்டான கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து அசத்தி இருந்தார்.

மியா அலிகான் போல மாறிய ரேஷ்மா
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1.3 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். தற்போது இவர் பாலிவுட் நடிகை மியா அலிகான் போல கண்ணாடி அணிந்து கொண்டு சிவப்பு சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











