காமசூத்ரா புக் எப்படி வந்தது.. நாட்டை நாசம் பண்ணிட்டாங்க.. கொந்தளித்த நடிகை!

சென்னை: டாப்ஸி பன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கு 'அஸ்ஸி' பிப்ரவரி 20ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை அனுபவ் சின்ஹா இயக்கி உள்ளார். இதில், ரேவதி, கனி குஸ்ருதி, மனோஜ் பஹ்வா, குமுத் மிஸ்ரா, ஜீஷன் அய்யூப் ஆகியோர் நடித்துள்ளனர். படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், ரேவதி பல சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

படம் குறித்து பல விஷயத்தை பேசி வரும் ரேவதி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடக இந்த நாடு இருக்கிறது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள். அதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் படத்திற்கு 'அஸ்ஸி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினுடைய கதையே பாதிக்கப்பட்ட பெண் பல தடைகளை கடந்து எப்படி போராடுகிறாள் என்பது தான் என்றார்.

Revathi interview

ரேவதி: அப்போது தொகுப்பாளர், ரேவதி நடித்த மௌனராகம் திரைப்படத்தில் வரும், முதல் இரவு காட்சிக்கு குறித்து கேள்வி எழுப்பினார். அதாவது, ரேவதிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாத போதும், மோகனுடன் திருமணம் நடக்கும். அதன் பின் முதல் இரவுக்கு ரேவதியை தயார் செய்து அவரது அம்மா அனுப்புவார். அப்போது கேப்பாங்க "இதே ரெண்டு நாள் முன்னாடி என்னை இப்டி அனுப்பிருப்பீங்களா"னு. அந்த காட்சி அனைவரையும் வாயடைக்கும் வகையில் இருக்கும். திருமணமாகிவிட்டால், அந்த பெண்ணின் உடல் ஆணுக்கு சொந்தமா என பல கேள்விகளை எழுப்பும் வகையில் இருக்கும்.

பல விஷயம் இருக்கு: இந்த காட்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரேவதி, அந்த வசனத்தை அப்போது நான் படிக்கும் போது மிகவும் நெகிழ்வாக இருந்தது. எதுவுமே தெரியா ஒரு பெண்ணை திருமணமாகிவிட்டது என்பதற்காக எப்படி முன்பின் தெரியாத ஆணுடன் அனுப்ப முடியும். ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே தெரிகிறது. அவர்கள் உடலுறவுவை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளவதில்லை. அதுமட்டுமே வாழ்க்கை இல்லை, அதைவிட தெரிந்து கொள்வதற்கு பல விஷயம் வாழ்க்கையில் இருக்கிறது.

காமசூத்ரா புத்தகம்: ஒரு ஆணும், பெண்ணும் முத்தம் கொடுத்துக்கொள்வது பெரிய விஷயமே இல்லை. இவை அனைத்தையும் இயற்கையாக நடக்கும் ஒரு விஷயம். அதைவிட மிகப்பெரிய விஷயம் ரிலேஷன்ஷிப், இதை பாதுகாக்கத்தான் நாம் அனைத்தையும் முயன்று கொண்டு இருந்தோம். அப்படித்தான் நாடும் 500 வருடத்திற்கு முன்பு இருந்தது. ஆனால், அனைவரும் சேர்ந்து அதை நாசம் செய்துவிட்டார்கள். இல்லை என்றால், காமசூத்ரா புத்தகம் நம்ம நாட்டுக்குள் வந்து இருக்குமா? நாம் ஒவ்வொரு விஷயத்தையும் பகுத்தாய்வு செய்யக்கூடியவர்கள். நாம் அதை நோக்கித்தான் திரும்பிச் செல்ல வேண்டும். ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். நாய், பூனை, ஆடு, மாடு போன்ற உயிர்களுக்கு மதிப்பளிக்கக்கூடியவர்கள் நாம். இதனால், ஆண், பெண் என்கிற பேதமெல்லாம் மாறி அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று ரேவதி பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X