3 மடங்கு சம்பளம் பேசி, படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. பிரபல நடிகை பரபரப்பு.. மீடு புகார் தொடருதே!
மும்பை: பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இந்தியில் நோ ஒன் கில்டு ஜெஸிகா, பீகே உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மான்வி கக்ரூ. சில டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இப்போது வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். டிவிஎப் டிப்ளிங், ஃபோர் மோர் ஷாட்ஸ், மேட் இன் ஹெவன் உட்பட சில பிரபலமான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.

போன் அழைப்பு
இவர், பட வாய்ப்புக்காகத் தன்னை படுக்கைக்கு அழைத்தனர் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு நாள் தெரியாத நம்பரில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், 'தான் இயக்குனர், வெப்சீரிஸ் எடுக்கிறோம். நடிக்க வேண்டும் என்றார். எடுத்ததுமே பட்ஜெட்டை சொன்னார். உடனே, அது குறைவாக இருக்கிறது என்றேன்.

மூன்று மடங்கு
பிறகு, முதலில் ஏன் பட்ஜெட்டை பேச வேண்டும்? கதையை சொல்லுங்கள். நன்றாக இருந்தால், பிறகு சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட விஷயங்களை பேசுவோம் என்றேன். அவர், முதலில் பட்ஜெட்டுக்கு ஓகே என்றால் மட்டுமே அடுத்த விஷயம் பற்றி பேசுவோம் என்றார். முதலில் சொன்ன சம்பளம் குறைவு என்றதுமே மூன்று மடங்கு உயர்த்தி, இது ஓகேவா? என்றார்.

காம்ப்ரமைஸ்
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முதலில் குறைவாகச் சொன்னவர் இப்போது இவ்வளவு தருகிறேன் என்கிறாரே? என்று. பிறகு என்னால் இவ்வளவு தொகை கொடுக்க முடியும். ஆனால், நீங்கள் 'காம்ப்ரமைஸ்' பண்ண வேண்டும் என்றார். அதைக் கேட்டதும் அப்செட் ஆகிவிட்டேன். பிறகு அவரை கோபமாக பேச ஆரம்பித்தேன்.

புகார் செய்வேன்
'முதல்ல போனை கட் பண்ணு. இப்படி பேசறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்? போலீஸ்ல புகார் பண்ணிருவேன் என்று ஆவேசமாக பேசிவிட்டு போனை வைத்தேன். சினிமாவில் மீடு புகார் ஒரு பக்கம் இருந்தபோதும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துவருவது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது' என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வருடம் நடந்துள்ளது. அவர் கொடுத்துள்ள இந்த பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை தனுஶ்ரீ தத்தா
சினிமாவில் வாய்ப்புகாக படுக்கைக்கு பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று பல நடிகைகள் ஏற்கனவே கூறியுள்ளனர். ஹாலிவுட்டில் நடிகைகள் ஆரம்பித்த மீடு புகார் ஷேஷ்டாக்கை, இந்தியாவில் ஆரம்பித்து வைத்தவர் நடிகை தனுஶ்ரீ தத்தா. இதையடுத்து பல நடிகைகள் துணிந்து தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்கள் பற்றி புகார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











