நடிகைக்கு விஜய் மனைவி சங்கீதா செய்த ஃபோன்.. ஃபோனை போட்டு ஓபனாகவே கேட்டுட்டாங்களாம்
சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்திருக்கிறார். வரும் திங்கட்கிழமை இந்த மனுவானது விசாரணைக்கு வரவிருக்கிறது. மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ்வார்களா அல்லது பிரிந்துவிடுவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் தவெக தொண்டர்கள். இதையெல்லாம் தாண்டி அவரை தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டுமெனவும் கடுமையாக தொண்டர்கள் உழைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடே எதிர்பார்க்காத விஷயத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் செய்தார் விஜய்யின் மனைவி சங்கீதா. தானும், விஜய்யும் கடந்த ஐந்து வருடங்களாகவே பிரிந்திருக்கிறோம் எனவே விவாகரத்து வேண்டுமென்று சொன்னது மட்டுமில்லாமல்; நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் குண்டை தூக்கி போட்டார். அதுவே விஜய்யின் இமேஜை எக்கச்சக்கமாக டேமேஜ் செய்தது. ஆனால் விஜய்யோ அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை; மாறாக திரிஷாவுடன் ஜோடியாக ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார்.

ஏக்கத்தில் விஜய்?: இந்த விஷயம் தேர்தலில் விஜய்க்கு என்ன மாதிரியான பின்னடைவுகளை ஏற்படுத்தப்போகிறதோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். விஜய்க்கும் அந்த பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சமாளித்துவருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, சங்கீதாவுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை தொண்டர் கொண்டு வந்திருந்தார். அதை வாங்கி பார்த்து தன்னுடைய பவுன்சர்களிடம் கொடுத்து வைக்க சொன்னார். இதனை கவனித்த ரசிகர்களோ சங்கீதாவுடன் சேர வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு இருக்கிறது என முடிவு செய்துகொண்டார்கள்.
ஜீவனாம்சம் கொடுப்பாரா?: ஆனால் சங்கீதாவோ விஜய்யை பிரிந்தே ஆவது என்ற உறுதியான முடிவுக்கு சென்றுவிட்டாராம். அதேபோல் அவர் கேட்கும் ஜீவனாம்சத்தை விஜய் கொடுக்க மறுக்கிறார் என்றும்; அதனால்தான் இந்த விவகாரம் இன்னமும் இழுத்துக்கொண்டிருக்கிறது என்றும் ஒருதரப்பினர் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி மனுத்தாக்கல் செய்த சங்கீதாவை நீலாங்கரை பங்களாவுக்குள் விஜய் அனுமதிக்க மறுத்ததும்; அதற்கு எதிராகவும் சங்கீதா மனுத்தாக்கல் செய்ததும் நடந்ததை யாரும் மறக்க முடியாது. அந்த விஷயத்திலும் விஜய்யின் இமேஜ் மேற்கொண்டு டேமேஜ் ஆனது.
அதுதான் ஒரே வழி: உடைந்திருக்கும் தன்னுடைய இமேஜை சரி செய்ய வேண்டுமென்றால் சங்கீதாவுடன் விஜய் சேர்ந்து வாழ்வதுதான் ஒரே வழி. ஆனால் விஜய்யோ உச்சக்கட்ட ஈகோ பிடித்தவர். கண்டிப்பாக சங்கீதாவுடன் சேரவெல்லாம் மாட்டார். ஜீவனாம்சத்தை கொடுத்து ஒதுங்கவும் மாட்டார். இந்த விவகாரம் கண்டிப்பாக நீண்டுகொண்டே செல்லும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில் நடிகை சங்கீதா சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
சங்கீதா பேட்டி: பிரபல யூடியூப் சேனலில் நடன அமைப்பாளர் கலாவிடம் பேசிய சங்கீதா, "என்னுடன் நடனம் ஆட வேண்டும் என்று விஜய் சில பாடல்களுக்கு கேட்டார். ஆனால் அப்போது நான் பெரிய ஹீரோயின் கிடையாது. விஜய் பாடல்கள் கண்டிப்பாக ஹிட் ஆகும். நாம் ஆடினால் இனிமேல் ஆடுவதற்கு மட்டும்தான் கூப்பிடுவார்கள் என நினைத்து நோ சொல்லிவிட்டேன். கிட்டத்தட்ட ஐந்து, ஆறு பாடல்களுக்கு கேட்டிருப்பார். ஒருநாள் விஜய்யின் மனைவி சங்கீதா எனக்கு ஃபோன் செய்து, 'விஜய் அவ்வளவு சொல்லியும் நீ ஏன் ஆடுவதற்கு நோ சொல்லிவிட்டாய். அவர் ரொம்பவே வருத்தப்பட்டார் என கூறினார். உடனே நான் காரணங்களை சொல்லி அவரிடம் சொல்லுங்கள் என கூறினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications















