கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்.. இன்ஸ்டாவில் கமெண்ட் ஆப்ஷனை ரத்து செய்த நடிகர் சுஷாந்தின் காதலி!

சென்னை: நெட்டிசன்கள் விளாசி தள்ளியதால் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் ஆப்ஷனை ரத்து செய்துள்ளார்.

Recommended Video

Chiranjeeve Sarja வின் உயிரான ஆசை | Meghana Raj Baby Bump

34 வயதே ஆன இளம் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட்டில் உள்ள சில பெரும் தலைகள்தான் அவரது மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

போலீசார் சம்மன்

போலீசார் சம்மன்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மும்பை போலீசார், சுஷாந்தின் குடும்பத்தார், நண்பர்கள், அவருடன் தொடர்பில் இருந்த திரைத்துறையை சேர்ந்த நண்பர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியான ரியா சக்ரபர்த்திக்கும் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதனை தொடர்ந்து பாந்த்ரா காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றார் ரியா சக்ரபர்த்தி. அவரிடம் 9 மணி நேரம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தானும் சுஷாந்தும் காதலித்தது உண்மைதான் என்றும், சுஷாந்துடன் ஒரே வீட்டில் வசித்ததாகவும் கூறினார் ரியா சக்ரபர்த்தி.

சுஷாந்துடன் சண்டை

சுஷாந்துடன் சண்டை

மேலும் தானும் சுஷாந்தும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் இருவரும் சேர்ந்து ஒன்றாக சொத்துக்களை வாங்க முடிவு செய்திருந்தாகவும் கூறினார் ரியா சக்ரபர்த்தி. ஆனால் சுஷாந்துடன் ஏற்பட்ட சண்டையால் அவருடைய வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் இருந்தபோதும், போனில் காதல் தொடர்ந்ததாகவும் கூறினார் ரியா சக்ரபர்த்தி.

மகேஷ் பட்டுடன் நெருக்கம்

மகேஷ் பட்டுடன் நெருக்கம்

ரியா சக்ரபர்த்தியின் இந்த தகவல்களை பதிவு செய்துக்கொண்டனர் போலீசார். அதேநேரத்தில் தயாரிப்பாளர் மகேஷ் பட்டுடன் ரியா சக்ரபர்த்தி நெருக்கமாக இருந்த போட்டோக்களும் வைரலானது. ஏற்கனவே சுஷாந்தின் மனநல மருத்துவர், ரியாவுடனான காதல் உறவில் சுஷாந்துக்கு மகிழ்ச்சியில்லை என்று கூறியிருந்தார்.

விளாசிய நெட்டிசன்ஸ்

விளாசிய நெட்டிசன்ஸ்

அந்த நேரத்தில் இந்த போட்டோக்களும் வெளியாக சுஷாந்தின் தற்கொலைக்கு ரியா சக்ரபர்த்தியும் காரணம் என சுஷாந்தின் ரசிகர்கள் விளாசி தள்ளினர். ரியா சக்ரபர்த்தியின் இன்ஸ்டா பதிவிலும் அவரை கழுவி ஊற்றி கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் போன ரியா, தனது இன்ஸ்டா பக்கத்தில் கமெண்ட் ஆப்ஷனை ரத்து செய்துள்ளார்.

கமெண்ட் ரத்து

கமெண்ட் ரத்து

ஏற்கனவே கரன் ஜோஹர், ஆலியாபட், சோனம் கபூர் ஆகியோர் நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாயினர். சுஷாந்தின் மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என ரசிகர்கள் கொந்தளித்தனர். அவர்களை சமூக வலைதளங்களில் திட்டித்தீர்த்தனர். ஆலியா பட் 13 லட்சம் ஃபாலோயர்களை இழந்தார். இதனை தொடர்ந்து கமெண்ட் ஆப்ஷனை அவர்கள் ரத்து செய்தனர். இந்நிலையில் அந்த பட்டியலில் ரியாவும் சேர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X