பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்பி கேர்ள் போல ஜொலிக்கும் ரித்திகா சிங்!

சென்னை :இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.

கோடியில் ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இப்பொழுது நடித்து வரும் கொலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி வரும் நிலையில் பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்பி கேர்ள் போல கிளாமராக போஸ் கொடுத்துள்ள ரித்திகாவின் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இயல்பாகவே குத்துச்சண்டை வீரரான

இயல்பாகவே குத்துச்சண்டை வீரரான

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ரித்திகா சிங் முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார்.

இயல்பாகவே குத்துச்சண்டை வீரரான ரித்திகா சிங் இறுதிச்சுற்று திரைப்படத்தில் பாக்ஸராக மிக சர்வசாதாரணமாக நடித்து பாராட்டுக்களை அள்ளினார்.

காதலுக்கும் நட்புக்கும் இடையே அழகான உணர்வை

காதலுக்கும் நட்புக்கும் இடையே அழகான உணர்வை

ஆண்டவன் கட்டளை,சிவலிங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை அதேசமயம் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ரித்திகா சிங் நடிப்பில் கடைசியாக வெளியான ஓ மை கடவுளே அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக ஈர்த்தது. காதலுக்கும் நட்புக்கும் இடையே நடக்கும் அழகான உணர்வை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருந்த ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க முதல் பாதியில் தோழியாகவும் இரண்டாவது பாதியில் காதலியாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

கொலை

கொலை

அருண் விஜய் நடிப்பில் பாக்ஸிங் கை மையப்படுத்தி உருவாகி வரும் பாக்ஸர் திரைப்படத்தில் ரித்திகா சிங் பாக்ஸராக மீண்டும் நடித்து வருகிறார். மேலும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 மற்றும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களிலும் மிக பிஸியாக நடித்து வருகிறார். கோடியில் ஒருவன் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு கொலை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிளாக் அண்ட் ஒயிட் பார்பி கேர்ள்

பிளாக் அண்ட் ஒயிட் பார்பி கேர்ள்

முற்றிலும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் கொலை படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு தமிழில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் ரித்திகா சிங் இதுவரை கவர்ச்சி காட்டாத கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் இனி கவர்ச்சி காட்டவும் தயார் என அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இவர் இப்போது பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்பி கேர்ள் போல தொடை அழகு தெரிய எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை இப்பொழுது பகிர்ந்துள்ளதை அடுத்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X