Rithika: பகத் ஃபாசில் கிட்ட இருந்து அதிகமா கிடைச்சது.. வேட்டையன் அனுபவம் பகிர்ந்த ரித்திகா சிங்!

சென்னை: நடிகர் பகத் ஃபாசில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். சமீபத்தில் ரஜினிகாந்துடன் பகத் ஃபாசில் இணைந்து நடித்திருந்த வேட்டையன் படம் வெளியாகி மிக சிறப்பான விமர்சனங்களை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்தப் படத்தில் திருடனாக நடித்திருந்தார் பகத் ஃபாசில். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டின்போதும் பகத்தை குறிப்பிட்டு பாராட்டினார் ரஜினிகாந்த். இந்நிலையில் வேட்டையன் படத்தில் பகத்துடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகளில் நடித்திருந்த ரித்திகா சிங் அவருக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் நடிப்பு நேச்சுரலாகவே வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

vettaiyan movie fahadh faasil rithika singh

வேட்டையன் படம்: ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது படத்திற்கான வரவேற்பு திரையரங்குகளில் குறைந்துள்ளதாகவும் இதனால் வசூல் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை லைகா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட் சென்னையில் நடத்தப்பட்டு படக்குழுவினருக்கு மட்டன் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இதில் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் மற்றும் நடிகை ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

vettaiyan movie fahadh faasil rithika singh

பிரியாணி விருந்து: இந்த விருந்து உபசார நிகழ்ச்சிகளில் ரித்திகா சிங் படக் குழுவினருக்கு பிரியாணி பரிமாறியதையும் பார்க்க முடிந்தது. அவரும் பிரியாணியை டயட் பற்றிய கவலையில்லாமல் ஒரு வெட்டு வெட்டினார். இந்நிலையில் தற்போது படத்தில் நடிகர் பகத் ஃபாசிலுடன் இணைந்து நடித்தது குறித்து ரித்திகா சிங் தனது பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். பகத்திற்கு அவரது நடிப்பு மிகவும் பிரில்லியண்ட் என்றும் தன்னுடைய ஃபேவரிட் நடிகர்களில் அவரும் ஒருவர் என்றும் ரித்திகா சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு டேக்கிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதாகவும் ரித்திகா பாராட்டியுள்ளார்.

vettaiyan movie fahadh faasil rithika singh

பகத்திடம் அதிகமாக பெற்றேன்: அவர் நடிக்க வேண்டிய தேவை இல்லாத காட்சிகளிலும் குறிப்பாக மற்றவர்கள் பேசுவதை கேட்கும் காட்சிகளிலும் புதிதாக எதையாவது ட்ரை செய்துக் கொண்டே இருப்பார் என்று ரித்திகா தெரிவித்துள்ளார். எந்த காட்சியிலும் அவர் சிரமப்பட்டு நடிப்பதில்லை என்றும் அவருக்கு நடிப்பு மிகவும் நேச்சுரலாகவே வருவதாகவும் ரித்திகா மேலும் கூறியுள்ளார். அவரிடம் இருந்து தான் வேட்டையன் படதின் ஒவ்வொரு டேக்கிலும் அதிகமான விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் ரித்திகா சிங் தெரிவித்துள்ளார். அவரின் நடிப்பை கூர்ந்து கவனித்தே தான் அதிகமான விஷயங்களை அவரிடமிருந்து பெற்றுக் கெண்டதாவும் கூறியுள்ளார்.

vettaiyan movie fahadh faasil rithika singh

தமிழில் அடுத்தடுத்த படங்கள்: அடுத்தடுத்து கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என தமிழில் இணைந்து நடித்துள்ளார் பகத் ஃபாசில். தொடர்ந்து தமிழில் இவரை அடுத்தடுத்த கேரக்டர்களில் பார்க்க முடிகிறது. மலையாளம், தெலுங்கு படங்களில் மாஸ் காட்டி வரும் நிலையில் மிகவும் பிஸியான நடிகராக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தான் ஏற்கும் கேரக்டரை மிகச் சிறப்பாக ஆக்கும் வித்தை இவருக்கு ரித்திகா சிங் சொன்னது போல நேச்சுரலாகவே வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X