பட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை.. ஏன் தெரியுமா?

பட ஆடியோவெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை ரித்விகாவை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

சென்னை: பட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை ரித்விகாவை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்தடுத்து நடித்த ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களும் ஹிட்டடித்தன.

தற்போது வணங்காமுடி உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் ரித்திகா சிங் நடித்து வரும் நீவிவரோ பட ஆடியோ நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

பிங்க் நிற உடை

பிங்க் நிற உடை

இதில் பங்கேற்க பிங்க் நிற உடையில் புறப்பட்டார் ரித்திவிகா. பிங்க் நிற உடைக்கு மேட்சாக செருப்பு அணிய நினைத்தார்.

மேட்சாக செருப்பு இல்லை

மேட்சாக செருப்பு இல்லை

தேடிப் பார்த்ததில் அந்த கலரில் செருப்பு இல்லை. இதையடுத்து வேறொரு ஷூ அணிந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.

செருப்பு இல்லாமல்

செருப்பு இல்லாமல்

நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்ததும் வாசலுக்கு வெளியிலேயே தான் அணிந்து வந்த ஷூவை கழற்றிவிட்டு மேடைக்கு சென்றார். செருப்பு அணியாமல் வந்த அவரை மேடையிலிருந்தவர்களும், விழாவுக்கு வந்திருந்தவர்களும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

அனைத்தும் மேட்ச்

அனைத்தும் மேட்ச்

வழக்கமாக நடிகைகள் எந்த நிறத்தில் உடை அணிகிறார்களோ அதற்கு மேட்சாகவே பொட்டு முதல் ஜிமிக்கி, வளையல், செருப்பு வரை அணிவது வழக்கம். இதனால் மேக்அப் செய்து முடிக்க மணிக் கணக்கில் நேரம் ஆகிவிடும்.

நேரத்துக்கு செல்ல

நேரத்துக்கு செல்ல

ரித்திகாவை பொறுத்தவரை நேரம் தவறாமையை பின்பற்றுகிறவர். உடைக்கு மேட்சாக செருப்பை தேடிக்கொண்டிருக்காமல் சரியான நேரத்துக்கு நிகழ்ச்சிக்கு செல்லும் முனைப்புடன் வேறு ஷூ அணிந்து சென்றார்.

பாராட்டு

பாராட்டு

அந்த ஷூ பொருத்தமாக அமையாததால் வாசலிலேயே கழற்றிவிட்டு வெறும் காலுடன் நிகழ்ச்சி முழுவதும் பங்கேற்றார். செருப்புக்காக நேரத்தை வீணாக்காமல் நிகழ்ச்சிக்கு வந்த ரித்திகாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X