கண்களில் கடுக்கன் போட்ட ரித்திகா சிங்.. ஒரிஜினலா இல்ல மேக்கப்பா?

சென்னை: நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

நிஜ வாழ்க்கையிலும் பாக்ஸராக இருக்கும் ரித்திகா சிங் இப்பொழுது கண்களில் வித்தியாசமான கடுக்கன் போட்டுள்ள புகைப்படங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது

குத்துச்சண்டை வீரராக

குத்துச்சண்டை வீரராக

இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. நடிகர் மாதவன் சாக்லேட் பாயாக இருந்து பின் சின்ன கேப்பிற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த படம் இறுதிச்சுற்று. குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளியான இந்த படத்தில் நடிகை ரித்திகா சிங் ஹீரோயினியாக நடித்து அறிமுகமானார்.

சொல்லப்படாத வித்தியாசமான கதை

சொல்லப்படாத வித்தியாசமான கதை

நிஜ வாழ்க்கையிலும் குத்துச்சண்டை வீரராக உள்ள ரித்திகா சிங் இந்த படத்திலும் மதி என்ற கதாபாத்திரத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத வித்தியாசமான கதை களத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் தேசிய விருதுகளையும் வென்றது.

ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

இறுதிச்சுற்று வெற்றியை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே என ரித்திகா சிங் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றன. அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் நட்புக்கும் காதலுக்கும் இடையே உள்ள ஒரு மெல்லிய உணர்வை மிக அழகாக கூறியிருந்தது. சிறுவயது முதலே நண்பர்களாக பழகி வரும் அசோக்செல்வன் மற்றும் ரித்திகா இறுதியில் தங்களுக்குள் இருந்த காதலை உணர்ந்து ஒன்று சேர்வதே படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடியாக

அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடியாக

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஓ மை கடவுளே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஒரே மாதிரியான படங்களில் நடிக்காமல் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்டி அசத்திக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்திலும் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியுடன் இணைந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் ரித்திகா சிங் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கண்களில் கடுக்கன்

கண்களில் கடுக்கன்

சமூக வலை தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் இப்பொழுது கண்களில் கடுக்கன் போட்டவாறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது ஒரிஜினலா இல்லை மேக்கப்பா என குழம்பிப் போயுள்ளனர். பார்க்கவே வித்தியாசமாக உள்ள ரித்திகாவின் இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X