கண்களால் பேசி கைது செய்யும் அழகியே ரித்திகா சிங்!
சென்னை : ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறியுள்ளார் ரித்திகா சிங்.
பிரபல இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீபகாலமாகவே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வரும் ரித்திகா சிங் இப்பொழுது கண்களால் கைது செய்யும் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மாதவனின் மிரட்டலான நடிப்பில்
இயல்பிலேயே குத்துச்சண்டை வீரரான ரித்திகா சிங் தமிழ் சினிமாவிற்கு இறுதிச்சுற்று மூலம் அறிமுகமானார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவனின் மிரட்டலான நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் மீனவப் பெண்ணாக மிக அற்புதமாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

இவருக்கு பக்காவாக செட் ஆனது
நிஜ வாழ்க்கையிலும் பாக்ஸராக ரித்திகா சிங் இருந்ததால் இறுதிச்சுற்று திரைப்படம் இவருக்கு பக்காவாக செட் ஆனது. மேலும் சென்னை பாஷையிலும் பிரித்து மேய்ந்து இருப்பார்.

மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது
இறுதிச்சுற்று தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கப்பட்டார். இருப்பினும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் இவருக்கு கடைசியாக வெளியான ஓ மை கடவுளே மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலர்களாக மாறி
அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் காதலுக்கும் நட்புக்கும் இடையேயான அழகிய உணர்வை மிக அற்புதமாக காட்டியது. சிறுவயது முதலே நண்பர்களாக பழகும் ஒரு ஆண் பெண் பின் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலர்களாக மாறி திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற கதையை மிகவும் சுவராசியமாக காட்டி இருந்தனர்.

தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக
இதில் முதல் பாதியில் தோழியாகவும் இரண்டாவது பாதியில் காதலியாகவும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ரித்திகா சிங் இப்போது தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறியுள்ளார்.
Recommended Video

கண்களால் பேசி கைது செய்யும் அழகியே
சமீபகாலமாகவே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திரைப்படங்களில் கவர்ச்சி காட்டவும் தயார் என சொல்லாமல் சொல்லி வரும் ரித்திகா சிங் இப்பொழுது மின்விளக்கு வெளிச்சத்தில் பெளர்ணமி நிலவு போல ஜொலித்துக் கொண்டு கண்களால் பேசி இளசுகளை கைது செய்யும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











