கிரீடம் இல்லாத இளவரசி போல மின்னும் அழகில் ஜொலிக்கும் ரிது வர்மா.. வைரலாகும் புகைப்படம்
சென்னை : வேலையில்லா பட்டதாரி 2ல் கெஸ்ட் அப்பியரன்ஸில் தோன்றிய நடிகை ரிது வர்மா இப்பொழுது தமிழில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் கணம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ரிது வர்மாவின் கிரீடம் மட்டும் இல்லாத இளவரசி போல மின்னும் அழகிய புகைப்படம் வைரலாகிறது.

கெஸ்ட் அப்பியரன்ஸில்
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து பெல்லி சூபுளு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான நடிகை ரிது வர்மா தமிழுக்கு வேலையில்லா பட்டதாரி 2ல் நடித்து அறிமுகம் செய்யப்பட்டார். வேலையில்லா பட்டதாரி 2ல் கெஸ்ட் அப்பியரன்ஸில் மட்டுமே தோன்றியதால் பெரிதாக தமிழ் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை

நெகட்டிவ் ஷேட் கலந்த கதாநாயகியாக
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் சுவாரசியமான அதேசமயம் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாநாயகியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான கண்ணும் கண்ணும் கொல்லையடிதால் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இதில் ரிது வர்மாவின் கதாபாத்திரம் மிகவும் தனித்துவமாக அமைக்கப்பட்டிருந்தது . நெகட்டிவ் ஷேட் கலந்த கதாநாயகியாக ரோலில் மிகச்சிறப்பாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்

குடும்ப கதை களத்தில்
தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் ரிது கடைசியாக நானிக்கு ஜோடியாக டக் ஜெகதீஷ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் குடும்ப கதை களத்தில் வெளியான டக் ஜெகதீஷ் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை மேலும் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

கிரீடம் இல்லாத இளவரசி
சுல்தான் வெற்றியை தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரு சேர உருவாகும் கணம் என்ற படத்தை இயக்கி வருகிறது. அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகை அமலா முக்கிய வேடத்தில் நடித்து மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். சர்வானந்த் ஹீரோவாக நடிக்கிறார். இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக மாறியுள்ள ரிது வர்மா இப்பொழுது இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரீடம் இல்லாத இளவரசி போல மின்னும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











