அம்சமான மூக்குத்தியில் அழகான போஸ்.. இளசுகளின் மனதைத் தைத்த ரித்விகா !

சென்னை : தமிழ் சினிமாவில் திறமையான இளம் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ரித்விகா.

மெட்ராஸ் படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இவர் இப்பொழுது விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மற்ற நடிகைகளைப் போல இவரும் இப்பொழுது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குளிர்ச்சிப் படுத்து வரும் நிலையில் இப்பொழுது மூக்குத்தி குத்தி அம்சமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

துணிச்சலான பல கதாபாத்திரம்

துணிச்சலான பல கதாபாத்திரம்

நடிகர்களை பட்டை தீட்டும் வெகு சில இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் இயக்குனர் பாலாவின் பரதேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ரித்விகா இப்பொழுது பல லட்சம் ரசிகர்களை கொண்டு திரைப்படங்களில் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே கொண்டாடிய நிலையில் அதில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நடிகை ரித்விகா இப்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர், எம் ஜி ஆர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பெரும் ரசிகர் கூட்டம்

பெரும் ரசிகர் கூட்டம்

இதுவரை தமிழ் திரைப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வரும் ரித்விகா மலையாளம் கன்னடம் உள்ளிட்ட வேற்று மொழிகளில் நடிக்காத போதும் அங்கும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது.

ரசிகர்களின் அன்பை அள்ளி

ரசிகர்களின் அன்பை அள்ளி

லாக்டவுனில் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நடிகைகள் பலரும் யோகா மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களின் அன்பை அள்ளி வந்த நிலையில் நடிகை ரித்விகாவும் முன்னணி நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வசீகரமான பல போட்டோஷூட்களை நடத்தி கலக்கி வந்தார்.

ஹோம்லி ஹீரோயின்

ஹோம்லி ஹீரோயின்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரித்விகா திரைப்படங்களில் அனைவரும் ரசிக்கும் கதாபாத்திரங்களிலும் சில சவாலான கதாபாத்திரங்களிலும் மட்டுமே நடித்து வந்த நிலையில் இவருக்கு ஹோம்லி ஹீரோயின் என்ற பெயர் இருந்து வந்தது.

வரவேற்பு பெற்று

வரவேற்பு பெற்று

இந்நிலையில் தன்னாலும் கிளாமர் காட்ட முடியும் என நிரூபித்துள்ள ரித்விகா வெளியிட்ட சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் முதலில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தாலும் இப்பொழுது அனைவரிடத்திலும் வரவேற்பு பெற்று வருகிறது.

அற்புதமான லுக்கில்

அற்புதமான லுக்கில்

இந்நிலையில் இப்போது சேலையில் அம்சமாக ஒரு பக்கம் ஜிமிக்கி கம்மல் மற்றொருபுறம் அதற்கு மேட்சிங்காக மூக்குத்தியுடன் ரசிகர்களின் மனதைத் தைத்துள்ள ரித்விகாவின் இந்த அற்புதமான லுக்கில் இருக்கும் புகைப்படம் இது வேற லெவலில் ட்ரண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X