மொட்டைமாடியில் ஹாயா ஒரு கிளிக்... "ஸ்டைலிஷ் தமிழச்சியே" என வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை : தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் பிரபலமானவராக இருந்து வரும் ரித்விகா தற்பொழுது மொட்டைமாடியில் செம ஸ்டைலிஸ் எடுத்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.

திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தும் ரித்விகா பல தயங்கும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்று வரை பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படத்தில் ரித்திகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதை தொடர்ந்து தற்பொழுது செம ஸ்டைலிஷாக மொட்டைமாடியில் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிப்பு வாழ்க்கை

நடிப்பு வாழ்க்கை

இயக்குனர் பாலாவின் பரதேசி திரைப்படத்தில் கருத்தகன்னி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய ரித்விகா, தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகப்பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இன்று வரை நின்று

இன்று வரை நின்று

இவர் இன்று வரை முழு கதாநாயகியாக பெரும்பாலான படங்களில் நடிக்காத போதும், இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திரைப்படங்களில் இவரது கதாபாத்திரங்கள் இன்று வரை நின்று பேசிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான மெட்ராஸ் திரைப்படத்தில் அன்புவின் மனைவியாக மேரி கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பி இருப்பார்.

ரசிகர்கள் கூட்டம் ஏராளம்

ரசிகர்கள் கூட்டம் ஏராளம்

மெட்ராஸ் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மிகப் பிரபலமாக பேசப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து ஒரு நாள் கூத்து, கபாலி, இருமுகன் மற்றும் சமீபத்தில் வெளியான இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று வரை பிரபலமான நடிகையாக வலம் வரும் ரித்விகாவிற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

வெற்றி மகுடம் சூடி

வெற்றி மகுடம் சூடி

இந்நிலையில் இவர் தமிழ் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்று பிக் பாஸ் சீசன் இரண்டில் வெற்றி மகுடம் சூடி பல கோடி மக்களின் அன்புக்கு சொந்தக்காரியானார்.

விஜய் சேதுபதி நடிப்பில்

விஜய் சேதுபதி நடிப்பில்

அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ரித்விகா தற்போது எம்ஜிஆர், மாடு, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார்.

ஸ்டைலிஷ் தமிழச்சியே

ஸ்டைலிஷ் தமிழச்சியே

ஊரடங்கு நேரத்தில் அசத்தலான மொட்டை மாடி போட்டோஷூட் செய்து அந்தப் புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். நீல நிற ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஸ்டைலிஷாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு பேண்ட் பாக்கெட்டில் கை விட்டவாறு செம கெத்தாக போஸ் கொடுத்துள்ள இந்த அல்டிமேட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு தற்பொழுது செம வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் "ஸ்டைலிஷ் தமிழச்சியே" என ரித்விகாவை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X