பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக மயக்கும் நடிகை ரித்விகா!
சென்னை: பா ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளியவர் நடிகை ரித்விகா
கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம் சிறப்பு தோற்றத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்
விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துவரும் ரித்விகா இப்போது பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக உள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.

கருத்தகன்னி
விருதுகளை அள்ளும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான பரதேசி திரைப்படத்தில் கருத்தகன்னி என்ற ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. தேசிய விருதை வென்ற பரதேசி படத்தில் ரித்விகாவை ரசிகர்கள் அந்த அளவிற்கு கவனிக்கப்படவில்லை.

அபாரமான நடிப்பு
இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மெட்ராஸ் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இப்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். வடசென்னையை பின்புலமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் மெட்ராஸ் திரைப்படம் வடசென்னை பற்றிய எண்ணத்தை பார்ப்போர் அனைவரையும் மாற்றச் செய்யும். ரவுடிசத்தை மட்டுமே வடசென்னையாக காட்டி வந்த பல இயக்குனர்களுக்கு மத்தியில் வடசென்னை மக்கள் படித்தவர்கள் விளையாட்டில் மிகச் சிறந்தவர்கள் வீரம் மிக்கவர்கள் என மெட்ராசஸில் பா ரஞ்சித் காட்டியிருப்பார். இதில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்விகாவின் அபாரமான நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது. சிறந்த துணை நடிகைக்கான விருதுகளையும் ரித்விகா வென்றார்.

சர்ச்சைகளில் சிக்காமல்
மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலியில் வித்தியாசமான ரோலில் நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் போதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரித்விகாவுக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் விளையாட்டிலும் நேர்மையாக விளையாடி ரசிகர்களின் அமோக ஆதரவால் வெற்றியாளராக மகுடம் சூடினார்.

பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக
இப்பொழுது விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, மாடு ஆகிய படங்களில் ரித்விகா நடித்து வருகிறார். இதுவரை பல படங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே தோன்றி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்த நிலையில் இப்போது பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக கொள்ளை அழகில் ரித்விகா உள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.


Click it and Unblock the Notifications











