கருப்பு ஸ்லீவ்லெஸ் காஸ்ட்யூமில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை ரித்விகா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகச்சிறப்பாக விளையாடி பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றவர் நடிகை ரித்விகா
ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு,வால்டர்,ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என பல படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் டைட்டில் வின்னராக வந்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்த ரித்விகா இப்பொழுது கருப்பு ஸ்லீவ்லெஸ் உடை யில் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.

கொத்தடிமைகளின் வாழ்க்கை
சினிமாத்தனம் இல்லாத நேச்சுரலான படங்களை இயக்கும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடித்த பரதேசி திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. இப்படத்தில் கொத்தடிமைகளின் வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக காட்டியிருப்பார்கள். நடிகை ரித்விகா முக்கியமான வேடத்தில் இதில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். பரதேசி கொடுத்த அறிமுகத்தைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவருக்கும் பரிச்சயமானார்

கலையரசனின் மனைவியாக
மெட்ராஸ் திரைப்படம் ரித்விகாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்ததோடு திருப்புமுனை படமாகவும் அமைந்தது. வடசென்னை மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியிருந்த இந்த திரைப்படத்தில் ரித்விகாவின் கதாபாத்திரமும் அவருக்கு ஜோடியாக நடித்த கலையரசனின் அன்பு கதாபாத்திரமும் படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய தூணாக அமைந்தது.

குணச்சித்திர வேடங்களில்
கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் ரித்விகா நடித்துள்ளார். அவ்வாறு பா ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் கபாலி படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். அதில் ரஜினியுடன் இடையேயான காட்சிகள் அனைவருக்கும் ஃபேவரைட் காட்சிகளாக அமைந்தது.

தவிர்க்க முடியாத நடிகையாக
ஒரு நாள் கூத்து, கபாலி, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை,டார்ச்லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, வால்டர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளீர் என இவரது பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. விரைவில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கருப்பு ஸ்லீவ்லெஸ் உடையில்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் டைட்டில் வின்னர் ஆனார் ரித்விகா. அதன் பிறகு சமூக வலைதளங்களிலும் இவரை பின்பற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் அடிக்கடி போட்டோஷூட்களின் மூலம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ரித்விகா இப்பொழுது கருப்பு ஸ்லீவ்லெஸ் உடையில் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் எடுத்து அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications