“ஒருத்தர் பத்தாது.. 5 பேரை திருமணம் செய்து கொள்வேன்”.. அமலாபால் மாதிரியே சர்ச்சையில் சிக்கிய நடிகை!

தான் ஐந்து பேரை திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியுள்ளார் நடிகை ரித்திகா சிங்.

சென்னை: தான் ஐந்து பேரை திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி அதிர வைத்துள்ளார் நடிகை ரித்திகா சிங்.

இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்ததால், தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் நடித்துள்ளார். அருண் விஜய்யுடன் பாக்ஸர் படத்தில் நடிக்க உள்ளார்.

இன்ஸ்டா நேரலை

இன்ஸ்டா நேரலை

இந்நிலையில் ரித்திகா சிங் இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த ரித்திகா, தான் ஐந்து பேரை திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

ஐந்து பேருடன் திருமணம்

ஐந்து பேருடன் திருமணம்

இதுகுறித்து அவர் கூறியதாவது, " நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்போது சிங்கிளாக தான் இருக்கிறேக்ன. நான் ஐந்து பேரையாவது திருமணம் செய்து கொள்வேன். உங்களை நேரில் பார்க்கும் போது நிச்சயம் உங்களையும் திருமணம் செய்து கொள்கிறேன்.

விளையாட்டில்லை

விளையாட்டில்லை

நான் இதை விளையாட்டாக சொல்லவில்லை. உண்மையாகத் தான் சொல்கிறேன். நான் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறேன். இல்லை என்றால் திருமணமே செய்து கொள்ளமாட்டேன்.

பார்ட்டி பிடிக்கும்

பார்ட்டி பிடிக்கும்

எனக்கு பார்ட்டிகளுக்கு போவது மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு மதுப்பழக்கம் கிடையாது. மது உடலுக்கு தீங்கானது. பார்ட்டிகளுக்கு சென்று காட்டுத்தனமாக நடனமாட எனக்கு மிகவும் பிடிக்கும்", என ரித்திகா கூறினார்.

தேவையில்லாத சர்ச்சை

தேவையில்லாத சர்ச்சை

திருமணம் தொடர்பாக ரித்திகா கூறியிருக்கும் விஷயங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. பெண்ணியம் பேசும் பலர் ரித்விகாவுக்கு ஆதரவாகவும், பலர் அவருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமலாபால் பேச்சு

அமலாபால் பேச்சு

இதனால் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரித்திகா. ஆடை பட ரிலீஸ் சமயத்தில் இதே போல் தனக்கு அதிக கணவர்கள் எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார் அமலாபால் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X