அம்மாடியோ.. தலைகீழா அந்தர் பல்டி அடித்த ரித்திகா சிங்.. வாய்பிளந்து பார்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை : நடிகை ரித்திகா சிங் ஜிம்மில் தாறுமாறாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார்.
குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் தமிழில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில், நடிகர் மாதவனுடன் ஜோடி போட்டு நடித்து ஸ்கோரை அள்ளினார் ரித்திகா சிங்.

நடிகை ரித்திகா சிங்
ஏய்...சண்டக்காரா குண்டு முழியில...ரெண்டு உயிரத் தேடிப்பாயுது... என்று முதல் படத்திலேயே குதித்து குதித்து ஆட்டம்போட்டு தனக்கான தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் ரித்திகா சிங். எனக்கு பாக்ஸிங் மட்டும் இல்லை, நடிப்பும் வரும் என்பதை நிரூபித்தார்.இப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்து வசூலை வாரிக் குவித்தது.

இயல்பான நடிப்பு
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா திரைப்படத்திலும் பேயாக நடித்திருந்தார். அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் க்யூட்டான தோழியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்த படங்களில்
தற்போது இவர் பாக்ஸர், பிச்சைக்காரன் 2,வணங்கான்,கொலை போன்ற தமிழ் படங்களிலும் King of Kotha என்ற மலையாளப்படம் ஒன்றிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். பாக்ஸிங் சாம்பியனாக இருந்தாலும், நடிகையான பின்னர் தனது அட்டகாசமான ஸ்டைல் மற்றும் ஃபேஷன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.

தாறுமாறாக வொர்க் கவுட்
இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங்கை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கும் ரித்திகா சிங், ஜிம்மில் தாறுமாறாக வொர்க் கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.

ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ்
படவாய்ப்பு இல்லாததால் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் 'கிங் ஆப் கோதா' என்ற மலையாளப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுகிறார் நடிகை ரித்திகா சிங். அபிலாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், ஷபீர், கோகுல் சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது


Click it and Unblock the Notifications











