அடடடா..கண்ணாடி முன் நின்னு விவகாரமா போஸ் கொடுத்த ரித்திகா சிங்... திண்டாடிப்போன இளசுகள்!
சென்னை : நடிகை ரித்திகா சிங், கண்ணாடி முன் நின்று விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படதைப் பார்த்த பேன்ஸ் அப்படியே திண்டாடிப்போனார்கள்.
ஏய்...சண்டக்காரா குண்டு முழியில...ரெண்டு உயிரத் தேடிப்பாயுது...என பாட்டுப்பாடி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரித்திகா சிங்.
குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று குத்துச்சண்டை வீராங்கனியாகவே நடித்திருந்தார்.

நடிகை ரித்திகா சிங்
சுருட்டை முடியுடன், அழகான ரொமான்சுடன் முதல் படமான இறுதிச்சுற்றில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். அந்த படத்தில் நடிகர் மாதவனுடன் ஜோடி போட்டு நடித்து ஸ்கோரை அள்ளினார் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனியாக இருந்த போதும், எனக்கு பாக்ஸிங் மட்டும் இல்லை, நடிப்பும் வரும் என்பதை நிரூபித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்து வசூலை வாரிக் குவித்தது.

க்யூட்டான நடிகை
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன்பின், ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா திரைப்படத்திலும் பேயாக நடித்திருந்தார். அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் க்யூட்டான தோழியாக நடித்திருந்தார்.

அடுத்த படங்களில்
தற்போது இவர் பாக்ஸர், பிச்சைக்காரன் 2,வணங்கான்,கொலை போன்ற தமிழ் படங்களிலும் King of Kotha என்ற மலையாளப்படம் ஒன்றிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். பாக்ஸிங் சாம்பியனாக இருந்தாலும், நடிகையான பின்னர் தனது அட்டகாசமான ஸ்டைல் மற்றும் ஃபேஷன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.

விவகாரமான போஸ்
இணையத்தில் படுஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங், குட்டி டவுடர் போட்டுக்கொண்டு கண்ணாடி முன் நின்று விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், ஆத்தாடி என்ன உடம்பு என பாட்டுப்பாடி வர்ணித்து வருகிறார். இணையத்தில், இந்த போட்டோவை அப்லோடு செய்த சிறிது நேரத்திலேயே பல லட்சம் லைக்குகளை பெற்றன.

அதிரடியான பேச்சு
நடிகை ரித்திகாவின் நடிப்பில் அண்மையில், இன் கார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எந்த மாதிரியான மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள் என்பதை படத்தின் கருவாக இருந்தது. இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டில் பேசிய ரித்திகா , பாலியல் வன்கொடுமை செய்பவருக்கு நானே நேரடியாக சென்று தண்டனை கொடுப்பேன் என அதிரடியாக கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











