Actress Ritika singh: தலைவர் 170 பட சூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. கையில் காயமடைந்த ரித்திகா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஞானவேல் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் நடிகை ரித்திகாசிங் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக ரித்திகா சிங் தற்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் சண்டை காட்சி ஒன்றில் நடித்தபோது தன்னுடைய கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ரித்திகா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், படத்தின் பிரமோஷன்களை விரைவில் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தலைவர் 170 சூட்டிங் ஸ்பாட்டில் விபத்து: இந்நிலையில் தன்னுடைய தலைவர் 170 படத்திற்காக டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ரித்திகா சிங் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். படத்தில் அவருக்கு ஆக்ஷன் காட்சிகளும் உள்ளதாக முன்னதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ரித்திகா சிங் கையில் காயம்: மேலும் werewolfஉடன் சண்டையிட்டது போல தன்னுடைய காயங்கள் காணப்படுவதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சூட்டிங் ஸ்பாட்டில் கண்ணாடி இருப்பதாக படக்குழுவினர் தன்னை எச்சரித்துக் கொண்டே இருந்தனர். ஆனாலும் சில நேரங்களில் இதுபோல நடப்பதை தவிர்க்க முடியாது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தினால் தான் மிகவும் அப்செட்டாகியுள்ளதாவும் தெரிவித்துள்ளார். ஆனால் வலி அதிகமாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கவனக்குறைவால் விபத்து: தன்னுடைய கவனக்குறைவால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் ரித்திகா. போல்டான கேரக்டர்களில் இவரை பார்க்க முடிகிறது. இயல்பான மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தொடர்ந்த இவரது படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன.
அடுத்தடுத்த படங்கள்: இறுதிச்சுற்று படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் ரித்திகா. முதல் படத்திலேயே மாதவனுடன் இணைந்து நடித்த ரித்திகா தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் ரித்திகா நடித்து வந்தாலும், தமிழில் அதிகமான பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். இந்நிலையில் தற்போது ரஜினியுடன் இணைந்து நடித்துவரும் தலைவர் 170 படம் அவர் தமிழில் மீண்டும் பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











