சட்டையைக் கழட்டிட்டு எக்குதப்பா ஆட்டம் போடும் சூப்பர் ஸ்டார் பட நடிகை.. காரணம் என்ன அதுவா?

சென்னை: தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மொத்த இந்திய சினிமாவிலுமே நடிகர் நடிகைகள் பின்பற்றக் கூடிய ஒரு விஷயம் என்றால் அது காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதான். இது நடிகர்களுக்கு பொருந்துமோ இல்லையோ நடிகைகளுக்கு நன்றாகவே பொருந்தும். நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி ஒரு பெரிய ஹிட் அல்லது அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து விட்டாலே அவர்களுக்கு மவுசும் சம்பளமும் கன்னாபின்னாவென எகிறிவிடும்.

அந்த காலத்தை சரியாக பயன்படுத்தி ஆண்டுக்கு குறைந்தது 8 படங்களிலாவது பல்வேறு மொழிகளில் கமிட் ஆகி பணம் சம்பாதித்துவிடுவது வழக்கமாக நடக்கூடிய ஒன்றுதான். அதே நேரத்தில் சினிமா உலகில் இன்னொரு விஷயமும் உள்ளது. அதாவது ஒரு நடிகரை அல்லது நடிகையை ஸ்டீரியோடைப் செய்வது. அதாவது, இந்த நடிகர் இந்த கதாபாத்திரத்திற்கு தான் சரிப்பட்டு வருவார், இந்த கதாபாத்திரத்திற்கு இந்த நடிகையை புக் செய்யுங்க என்பது திரையுலகில் நடைபெறும் ஒன்றுதான். இதனாலோ என்னவோ பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சினிமா வாழ்க்கை அவர்கள் நினைத்ததைப் போல அமையவில்லை.

Actress Ritika Shares Her Glamour Dance Video On Instagram Goes Trending
Photo Credit:

இந்த வரிசையில் நடிகை ரித்திகா சிங் இணைந்துவிட்டாரோ என்ற கேள்வி இப்போது திரையுலகை கடந்து இணையவாசிகள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. அதாவது ரித்திகா இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரை உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். அந்த படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார் ரித்திகா. அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் மீது இருக்கும் ஸ்ட்ரியோடைப்பான விஷயம் என்னவென்றால், ரித்திகா ஹோம்லி கதாபாத்திரத்திற்கோ, கிளாமர் கதாபாத்திரத்திற்கோ செட் ஆக மாட்டார்.
மிடுக்கான கதாபாத்திரம்: ரித்திகா மிகவும் மிடுக்கான, தைரியமான கதாபாத்திரங்களுக்கு தான் செட் ஆவார் என்ற மனநிலை திரையுலகில் உள்ளது.கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் கூட காவல்துறை அதிகாரியாக தான் ரித்திகா சிங் நடித்திருந்தார். அதில் இவரது கதாபாத்திர வடிவமைப்பும் மிகவும் தைரியமானவராகத்தான் இருந்தது. திரையுலகில் மிகவும் சொற்பமான படங்களில் மட்டுமே இதுபோன்ற கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்படுகிறது.


கிளாமர் வீடியோ: அப்படி இருக்கும்போது நடிகை ரித்திகா சிங் போல் இருக்கும் கதாநாயகிகளும் அந்த சொற்பமான கதாபாத்திரத்திற்கு போட்டியாக இருக்கிறார்கள். இந்நிலையில்தான் ரித்திகாவின் அண்மைக்கால இன்ஸ்டாகிராம் போஸ்ட்களை பார்த்த இணையவாசிகளும் ரசிகர்களும் ரித்திகா தனது ரூட்டை மாற்றி விட்டார் போலயே என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் தனது கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது செம கிளாமராக ஆட்டம் போட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்: அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் இரண்டு ஆண் நடனக் கலைஞர்களுடன் இணைந்து ஆடுகிறார். செம ஸ்டைலாக நடனமாடும் ரித்திகாவின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் அந்த வீடியோவில் செம கிளாமரான நடனத்தையும் ஆடியுள்ளார். வீடியோவின் இறுதியில் தனது மேல் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடையுடன் நடனமாடுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகளும் ரசிகர்களும் எப்படி இருந்த ரித்திகாவை இப்படி மாற்றி விட்டதே சினிமா உலகம் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Actress Ritika Shares Her Glamour Dance Video On Instagram Goes Trending
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X