பாத்ரூம்ல குத்த வச்சு துணி துவைச்சா கூட வீடியோவா.. என்னங்கடா டேய்!
சென்னை : நடிகை ரித்திகா சிங் பாடிக்கொண்டே துணிதுவைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வருடா வருடம் வெளியாகும். ஆனால் ஒரு சில படங்களே அதிகமாக நம்மை ஈர்க்கும், அப்படி நம்மை சமீபத்தில் ஈர்த்த தமிழ் திரைப்படம் தான்"ஓ மை கடவுளே". ஒரு வித்யாசமான கதைக்களம், இதுவரை பார்த்திராத காதல் என நம் அனைவரையும் கவர்ந்தது. இதில் முக்கியமாக நம் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் ரித்திகா சிங்.

நூடுல்ஸ் மண்டை என பலராலும் தற்போது அழைக்கப்பட்டு வரும் அழகுதான் ரித்திகா சிங். தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில், மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் அறிமுகமானார். அழகான தோற்றம், முக பாவனை, நார்த் மெட்ராஸ் பெண் என தன் முதல் படத்திலேயே அட்டகாசமாக நடித்திருப்பார். அதுமட்டுமின்றி தன் முதல் படத்தில் சிறந்த அறிமுக நடிகை என்ற விருது வாங்கி கௌரவிக்கப்பட்டார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையில் இவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு பெரும் வரவேற்பை தந்தது. பலரை கவரும் வண்ணம் இவரின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். இந்த நூற்றாண்டின் தலை சிறந்த சொல் நூடுல்ஸ் மண்டை என்ற அளவிற்கு மிகப் பிரபலமான ஒரு கதாபத்திரமாக அமைந்தது. இதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தற்போது லாக் டவுன் என்பதால் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே அனைவரும் தங்களின் போட்டோக்கள் வீடியோக்கள் என பதிவிட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து வீட்டில் நேரத்தை கழித்து வரும் ரித்திகா சிங் அவர்களும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தன் வீட்டு துணிகளை துவைக்கிறார். அதுவும் அழகாக ஹிந்தி பாடலை முனுமுனுத்துக் கொண்டு துணியை துவைக்கிறார். இந்த காலகட்டத்தில் யாரும் கையில் துணிகளை துவைப்பது இல்லை, வாஷிங் மிஷின் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு பிரபலம் கையில் துணி துவைப்பது வியப்பாக உள்ளது என்றும், துணிதுவைக்கக்கூட தெரியுமா என்றும் பல நெட்டிசன் கிண்டல் அடித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலையதளங்கில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











