தியேட்டர்ல இருந்து வரும் போது எல்லாரும் சிரிச்சுட்டே வராங்க.. சந்தோஷமா இருக்கு.. நடிகை ஹேப்பி!
Recommended Video
சென்னை: ஓ மை கடவுளே படம் குறித்து நடிகை ரித்திகா சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓ மை கடவுளே படம் காதலர் தினமான கடந்த 14ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன், நடிகை ரித்திகா சிங் மற்றும் சின்னத்திரை நடிகை வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதேபோல் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து ஒ மை கடவுளே படத்தை இயக்கியுள்ளார்.
சிறு வயதிலிருந்து தோழியாக இருந்தவரை திருமணம் செய்து கொண்டு நடிகர் படும் பாடே படமாக சொல்லப்பட்டுள்ளது. படத்தை பார்த்தவர்கள் ஸ்க்ரின் பிளேவையும் நட்சத்திரங்களின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.வசூல் ரீதியாகவும் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
சென்னை உட்பட தமிழக பாக்ஸ் ஆபிஸில் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது ஓ மை கடவுளே படம். சமூக வலைதளங்களிலும் படத்தை பாராட்டி கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்த ரித்திகா சிங், படத்திற்கான ரெஸ்பான்ஸ் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியிருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, நீங்கள் அனைவரும் ஒரு பெரிய புன்னகையுடன் தியேட்டர்களில் இருந்து வெளியே வருவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் ரியாக்ஷ்ன்களை காண சென்று கொண்டிருக்கிறேன். உங்கள் எல்லோரையும் ரொம்பவே நேசிக்கிறேன். இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











