Dhruva natchathiram: விக்ரம் படத்தில் நடித்ததால் ஏற்பட்ட வருத்தம்.. ரிது வர்மா பகிர்ந்த தகவல்!
சென்னை: நடிகர் விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் கடந்த 2018ம் ஆண்டில் துவங்கப்பட்டு, சில மாதங்கள் சூட்டிங் நடத்தப்பட்ட சூழலில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் முடங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டில் மீண்டும் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலேயே இந்தப்படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போதுவரை படம் ரிலீசாகாமல் உள்ளது.
படம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்து வருகிறது. இந்தப் படத்தின்மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்த ரசிகர்கள், தற்போது அந்த ஆர்வத்தை காத்து வருகின்றனர். இதேபோல படம் கண்டிப்பாக வெளியாகி சக்சஸ் அடையும் என்ற நம்பிக்கையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் மேனனும் உள்ளார். இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்காகவே அவர் நடிக்கத் துவங்கியதாகவும் கூறப்படுகிறது.

துருவ நட்சத்திரம்: நடிகர் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 2018ம் ஆண்டிலேயே துவங்கப்பட்டு சில மாதங்கள் நடைபெற்றது. 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட சூட்டிங் நிறைவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் சூட்டிங் தடைப்பட்டது. ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீது ஏராளமான ரசிகர்கள் மிகவும் அதிகமான ஆர்வத்துடன் உள்ளனர். அதற்கேற்ப முன்னதாக வெளியான இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்தன.
நிறைவடைந்த சூட்டிங்: கௌதம் மேனன் தொடர்ந்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்காகவே படங்களில் நடித்ததாக தன்னுடைய பேட்டிகளில் தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டில் மீண்டும் தூசுத்தட்டப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டது. இதற்கு விக்ரமும் மிகச்சிறப்பான வகையில் ஈடு கொடுத்தார். தன்னுடைய கையில் விபத்தால் காயம் ஏற்பட்ட சூழலிலும் இந்தப் படத்தில் அவர் நடித்துக் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்திலேயே படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதுவரை படத்தின் ரிலீஸ் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.
நாயகி ரிது வர்மா: இந்தப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ரிது வர்மா நடித்துள்ளார். இவர்களது சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தும்வகையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் இந்தப் படம் தொடர்ந்து ரிலீஸ் தள்ளிப்போவது தன்னை மிகவும் வருத்தம் கொள்ள செய்வதாக நடிகை ரிது வர்மா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கௌதம் மேனனின் ரசிகையாக அவரது இயக்கத்தில் நடிப்பது தன்னுடைய கனவாக இருந்ததாகவும் தன்னுடைய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
ரிது வர்மா வருத்தம்: கௌதம் மேனின் மேஜிக்கை மீண்டும் இந்தப் படத்திலும் ரசிகர்கள் என்ஜாய் செய்ய வேண்டும் என்று தான் எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் ரிது வர்மா கூறியுள்ளார். ஒரு மாலைப் பொழுதில் கௌதம் மேனன் அலுவலகத்தில் இருந்து இந்தப் படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்தது மிகப்பெரிய சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும் ரிது வர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் நினைத்ததை போலவே கௌதம் மேனனின் மேஜிக்கை மீண்டும் அனுபவிக்க ரசிகர்கள் காத்திருக்கத்தான் செய்கின்றனர்


Click it and Unblock the Notifications











