பாலிவுட் என்றாலே பிரச்சனை தான் ..இதனால் தான் நான் நடிப்பதை குறைத்துக் கொண்டேன்.. பிரபல நடிகை பளிச்!

மும்பை:தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் ரியா சென். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் குட்லக் என்ற படத்தில் நடித்தார் .

ஆனால் அந்தப் படம் வருமானரீதியாக சரியாக போகவில்லை என்று அவர் தமிழ் சினிமாவில் விட்டு ஒதுங்கி விட்டார். இந்த ஊரடங்கு சமயத்தில் அனைத்து நடிகைகளும் சமூகவலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாகவே இருந்து வருகின்றனர்.

அதிக கவர்ச்சியாக நடிக்க சொன்னதால் தான் பாலிவுட்டில் நடிப்பதை குறைத்துக்கொண்டேன் என்று ரியா சென் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

குற்றம் சாட்டு

குற்றம் சாட்டு

வீட்டில் யோகா செய்வதையும் ,உடற்பயிற்சி செய்வதையும், விதவிதமான போட்டோக்களாக எடுத்தும், வீடியோக்கலாகவும் பதிவிட்டு எப்பொழுதும் ரசிகரை நினைவில் இருக்கும் அளவிற்கு எதையாவது செய்து கொண்டிருக்கின்றனர்.சுஷாந்த் மரணத்திற்குப் பிறகு அனைவரும் நெபொடிசம் பிரச்சனை அதிகமாக இருக்கிறது என்று பலதரப்பில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வாரிசுகளுக்கு முக்கியத்துவம்

வாரிசுகளுக்கு முக்கியத்துவம்

சமீபத்தில் நடிகை சுஷ்மிதா சென்னும் அதனை ஒப்புக் கொண்டார் . பாலிவுட்டில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளித்து பெரிய ஆட்களை மட்டும் வளர்த்து வருகிறார்கள் திறமை இருந்தாலும் சினிமா பின்புலம் இல்லாதவர்களை ஓரம்கட்டி ஒதுக்கிவிடுகிறார்கள் சினிமா அரசியல் அதிகமாக இருக்கிறது என்று பல வகையிலும் குற்றம்சாட்டி வந்த நிலையில் பெரும்பாலும் அனைத்து நடிகைகளும் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர்.

வெளுத்து வாங்குதல்

வெளுத்து வாங்குதல்

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்குப் பிறகு சினிமாவில் இருக்கும் பின்புலம் சார்ந்த அனைத்து பெரிய நடிகர் நடிகைகளையும் அவரது ரசிகர்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.பெரிய பிரபலமாக இருந்தாலும் அவர்களை வெறுக்க தொடங்கி உள்ளனர் .அவர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டு விசாரித்து வருகின்றனர் .இன்ஸ்டாவிலும் ,ட்விட்டறிலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் சரிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஒதுக்க தொடங்கினர்

ஒதுக்க தொடங்கினர்

நான் சினிமாவில் நடிக்கத் துவங்கிய போது என்னுடைய வெற்றி படங்களை பார்த்து அனைவரும் நல்ல நடிகை என்று கூறி வந்தனர் .ஆனால் சில படங்கள் சரியாக போகாததால் பலரும் பலவிதமாக பேச தொடங்கி விட்டனர் .என்னை ஒதுக்க தொடங்கிவிட்டனர். படம் ஓடினால் தான் நல்ல நடிகை என்றும், படம் சரியாகப் போகவில்லை என்றால் அவர் நடிக்க தகுதி இல்லாதவர் என்றும் குற்றம் சாட்டி வருவது அனைவரின் இயல்பாகவே இருக்கிறது.

மக்களை குறை சொல்லக்கூடாது

மக்களை குறை சொல்லக்கூடாது

மக்களையும் குறை சொல்ல முடியாது மக்கள் என்ன செய்வார்கள் ஒரு படத்தை வைத்து தானே அங்கீகாரம் கொடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது . நான் வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த போது என்னை அதிகமாக செக்ஸியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர். அது எனக்கு பிடிக்காததால் நான் சினிமாவை விட்டு சற்று சற்று ஒதுங்கியே இருந்தேன்.

பாலிவுட்டில் நிறுத்திவிட்டேன்

பாலிவுட்டில் நிறுத்திவிட்டேன்

பள்ளிப்பருவத்தில் என்னை செக்ஸி கேர்ள் என்று அனைவரும் அழைப்பார்கள் அது சினிமா துறையிலும் தொடர எனக்கு விருப்பமில்லை. பல கதாபாத்திரங்களில் நான் நடித்ததை , நான் பார்த்தாலே என்னை வியக்கும் அளவிற்கு இருந்தது. அதிகமாக செக்ஸியாக நடிக்க சொன்னதனால் நான் பாலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்ற தகவல் வெளியாகியுள்ளது .

நல்ல வாய்ப்பு கிடைத்தது

நல்ல வாய்ப்பு கிடைத்தது

கவர்ச்சி பிரச்னையால் பெங்காலி படங்களில் நடிக்கத் துவங்கினேன். பெங்காலி படங்களில் எனக்கு பலவிதமான கதாபாத்திரங்களும் நடிக்க வாய்ப்பு அதிகமாக கிடைத்தது, என் முழு திறமையையும் என் நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் பாலிவுட்டில் டைரக்டர்கள் சௌகரியத்துக்கு என்னை நடிக்க சொல்வதனால் என் முழு திறமையையும் என்னால் காட்ட முடியவில்லை.

முன்னணி கதாநாயகி

முன்னணி கதாநாயகி

வெப் சீரிஸ்களில் நடிப்பதனால் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் ,தனது நடிப்புத் திறமையை காட்டுவதிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதே நிம்மதியாக இருக்கிறது என்றும் நடிகை ரியா சென் கூறியுள்ளார்.

சந்தோஷமாக நடிப்பேன்

சந்தோஷமாக நடிப்பேன்

இவ்வாறு குற்றம் கூறுவதனால் பாலிவுட் படங்களில் நான் நடிக்க போவதில்லை என்று அர்த்தம் இல்லை,என்னுடைய நடிப்பிற்கும், திறமைக்கும் ஏற்ற படங்கள் அமைந்தால் மட்டுமே நான் சந்தோஷமாக நடிப்பேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இவ்வாறுகூறும் ரியாசென் சமீபகாலமாகவே வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாகவே இருக்கிறது. இது ரியா சென்னா ? என்று கேட்கும் அளவிற்கு பல வகையான ஆங்கில்களிலும் பலவகையான போஸ்களிலும் கலக்கி வருகிறார் நடிகை ரியா சென்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X