ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் !
சென்னை : ஜிகுஜிகு என்று சில்வர் நிறத்தில் உடை அணிந்து சோபாவில் படுத்துக்கொண்டு கொடுத்த போஸில் ரியாவை பார்த்து பலரும் ரசித்து வருகின்றனர்.
தமிழில் தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரியா சென். பாரதிராஜா படம் என்பதால் சற்று பேசப்பட்டதோ என்னமோ தெரியவில்லை.
அதற்கு பிறகு அவருக்கு எந்த ஒரு படமும் கைகொடுக்கவில்லை. ஒரு பாடலுக்கு நடனம் ஆடலாம் என்று முடிவு செய்த ரியா அரசாட்சி என்ற அர்ஜுன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அந்த பாடலும் வந்த சுவடு இல்லாமல் மறைந்து விட்டது.

தாரக மந்திரம்
பல முயற்சிகள் செய்த பிறகும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பிறகு அவர் இந்தியில் கவனம் செலுத்தினார் . சில் சிலாய், எம்.எம்.எஸ் ரிட்டர்ன்ஸ், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 போன்ற பல படங்களில் நடித்து வந்தார். தற்போது பலரும் சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி இமேஜ்
இவரெல்லாம் முன்னாள் ஹீரோயின் என்று சொல்லுமளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சமூக வலைத்தளத்தில் அன்றாடம் அனல் பறக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவது தனது வேலையாக செய்து வருகிறார். பல நடிகைகள் கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதனை சமூகவலைதளங்களில் வந்துவிட்டாலும் இவருக்கு கிடைக்கும் கிளாமர் இமேஜ் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

கடுப்பான ரியா
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே கவர்ச்சி நிறைந்த புகைப்படங்கள் தான் நிறைந்து வழிகின்றது. அந்த ரியாவா நீங்க என்று பல ரசிகர்களும் இவரை ஆச்சரியமாகத்தான் கேள்வி எழுப்பி வருகின்றனர். பல நடிகைகள் கவர்ச்சியாக புகைப்படம் பதிவிட்டாலும் எனக்கு மட்டும் கிளாமர் இமேஜ் வந்து விட்டது என்று பல சமயங்களில் கடுப்பாகியுள்ளார் ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

நச்சரிக்கும் கேள்விகள்
தாஜ்மஹால் படத்தை பார்க்கும்போது இப்படி நீங்கள் இல்லையே இப்பொழுது இப்படி மாறி விட்டீர்கள் என்று பலர் வாயையும் பிளந்துள்ளனர். இப்போது ஒன்னும் குறைந்து போகவில்லை , இந்த கவர்ச்சியை கொஞ்சம் தமிழ் சினிமா பக்கம் திரும்புங்கள் ,செகண்ட் ரவுண்டில் சிக்ஸர் அடிக்கலாம் என்று பல நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.

ஒய்யாரமாக படுத்து
சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள ஜிகுஜிகு உடையில் சோபாவில் படுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பல ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு ஆதரவு கொடுத்து வந்தாலும், சில ரசிகர்கள் நக்கலடிக்க தான் செய்துள்ளனர். அதில் ஒருவர் வயது ஆக ஆக கிளாமரும் கூடிக்கொண்டே போகிறது என்று நக்கலாக கமெண்ட் செய்துள்ளார்..

செகண்ட் ரவுண்டு நிச்சயம்
இந்த ஒரு புகைப்படத்திற்கு மட்டும் கிட்டதட்ட 75 ஆயிரம் லைக்குகளுக்கு மேல் குவிந்துள்ளது. பலரும் இவரை கடல் கன்னி மாதிரி இருக்கீங்க என்று கூறி வருகின்றனர். இப்படியே போனால் தமிழ் சினிமாவில் செகண்ட் ரவுண்டு வளம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை .இவரது சகோதரி ரைமா சென் தற்போது அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











