ரியாஸ் கான் மருமகளின் வளைகாப்பு.. விழாவில் பப்லு என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் குழந்தை இருக்கும் மரியாவை திருமணம் செய்து கொண்டார் ஷாரிக். அண்மையில் மரியா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருந்த நிலையில் தற்போது, ரியாஸ் கானின் மருமகளுக்கு தடபுடலாக வளைகாப்பு நடந்துள்ளது.
சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக கலக்கி வருபவர் ரியாஸ் கான். இவர், சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் கோதாவரியாக நடித்த கமலா காமேஷின் மகளான உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமா ரியாஷ் கானும் அன்பே சிவம், மௌனகுரு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானார். இதைத் தொடர்ந்து, பென்சில், டான் போன்ற படத்தில் நடித்துள்ளார்.

காதல் திருமணம்: ஷாரிக் ஹாசன், ஜிம்முக்கு சென்ற போது தான் மரியா ஜெனிஃபரை சந்தித்துள்ளார். அதன் பின் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு பெற்றோரின் சம்மதத்தடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. மரியா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படியும், உமா இந்து மதத்தை சேர்ந்ததால் இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

8 வயதில் மகள்: திருமணத்திற்கு பிறகு ஷாரிக்கும், மரியாவும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில், ஷாரிக்கை விட நான் வயதில் மூத்தவள், ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ஜாரா என்கிற மகள் இருக்கிறாள்.நான் சிங்கிள் மதராகத்தான் கஷ்டப்பட்டு என் மகளை வளர்ந்து வந்தேன், இதனால், எனக்கு என் மகள் தான் முக்கியமாக தெரிந்ததால், இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. வருபவர் என்னை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், என் மகளை ஏற்றுக்கொள்வார்களா என்கிற பயம் இருந்தது. ஆனால், என் மகளை ஷாரிக் ரொம்ப நன்றாக பார்த்துக்கொண்டார். அதைப்பார்த்துத்தான் எனக்கு இவர் மீது காதலே வந்தது. நல்ல கணவரை விட ஷாரிக் நல்ல அப்பாவாக இருக்கிறார் என்றார்.

வளைகாப்பு விழா: இந்நிலையில், கடந்த வாரம் ஷாரிக் ஹாசன், மரியா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிய நிலையில், இன்று மரியாவிற்கு தடபுடலாக வளைகாப்பு விழா நடந்துள்ளது. அதில், நண்பர்கள் சின்னத்திரை நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் பப்லு, மரியாவிற்கு நலங்கு வைத்து வாழ்த்து கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











