பிளாக் அண்ட் பிளாக்.. ரித்விகாவின் தாறுமாறு போட்டோஷூட் !
சென்னை : பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பல கோடி தமிழ் மக்களின் இதயங்களை வென்ற நடிகை ரித்விகா தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
மெட்ராஸ் திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்ட நிலையில், மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார்.
லாக்டவுன் காரணமாக, ஹீரோயின்கள் பலரும் விதவிதமான போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நிலையில் தற்பொழுது ரித்விகாவும் விதவிதமான உடைகளில் மிளிரும் புகைப்படங்களை தற்பொழுது வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

திரைப்படங்களில் ஒப்பந்தமாகி
சமீபத்தில் மொட்டைமாடி போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்த ரித்விகா, தற்பொழுது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து கொண்டு வருகிறார்.

வெற்றிக் கோப்பை
மெட்ராஸ், பரதேசி, கபாலி உள்ளிட்ட மிகப்பிரபலமான திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் ரித்விகா, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு மேலும் பிரபலமான நிலையில் பல கோடி தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு பிக்பாஸ் போட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றார்.

செம ஸ்டைலிஷாக
இந்நிலையில் கொரானா நோய்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஹீரோயின்கள் பல்வேறு விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதோடு தொடர்ந்து வைரலாகி வருகின்றனர். அந்தவகையில் ரித்விகா தற்பொழுது பிளாக் அண்ட் பிளாக் உடையில் செம ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

லேட்டஸ்ட் போட்டோஷூட்
சமீபத்தில் மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலான ரித்விகா தற்பொழுது, பிளாக் அண்ட் பிளாக் உடையில் செம ஸ்டைலிஷாக ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு வித்தியாசமான கோணங்களில் ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வரும் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளதோடு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications