முட்டி தெரிய குட்டி பாவாடையில் ரித்விகா.. ரசிகர்கள் ஷாக்!

சென்னை : ஊரடங்கு காலத்தில் கவர்ச்சி காட்டாத பல நடிகைகளும் கவர்ச்சியை கையில் எடுத்து, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகின்றனர்.

மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் நடிகை ரித்விகா.

திரைப்படங்களில் அமைதியான கதாபாத்திரங்களில் கவர்ச்சி எதுவும் காட்டாமல் நடித்து வந்த ரித்விகா இப்போது முட்டி தெரிய குட்டை பாவாடையுடன் போட்டோ ஷூட்டில் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்தவுடன் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

இளம் நடிகை

இளம் நடிகை

திரைப்படங்களில் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை முழுதாக அர்ப்பணித்து நடிப்பதில் இப்போதுள்ள இளம் நடிகைகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருபவர் நடிகை ரித்விகா.

விருது

விருது

இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பலருக்கும் பரிச்சயமானதோடு சிறந்த நடிகை என பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார்.

கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது

கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது

மெட்ராஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் அதைத்தொடர்ந்து ஒரு நாள் கூத்து, கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

வெற்றி மகுடம்

வெற்றி மகுடம்

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை வென்ற ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு வெற்றி மகுடம் சூடினார்.

அதே பாணியை பின்பற்றி

அதே பாணியை பின்பற்றி

இந்நிலையில் திரைப்படங்களில் இதுவரை கவர்ச்சி எதுவும் காட்டாமல் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரித்விகா, கொரானா நேரத்தில் பல கதாநாயகிகள் வித விதமான கவர்ச்சி போட்டோஷூட்களை எடுத்து அதை சோசியல் மீடியாக்களில் பரவ விட்டதைத் தொடர்ந்து ரித்விகாவும் அதே பாணியை பின்பற்றி உள்ளார்.

முட்டி தெரிய

முட்டி தெரிய

ரித்விகாவை இதுவரை பலரும் பார்த்திராத மிகவும் குட்டைப் பாவடையில் முட்டி தெரிய செம்ம க்யூட்டாக பெட்டியின் மீது ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு பல்வேறு விதங்களில் போஸ் கொடுத்துள்ளார். ரித்விகாவின் இந்த அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி போயுள்ள நிலையில், விரைவில் இவரை திரைப்படங்களிலும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X