Riythvika: சத்தமில்லாமல் நடந்த ரித்விகாவின் நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்து.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகா, ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, வால்டர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, ரித்விகா நிச்சயதார்த்தம் முடித்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சியில், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பொன்னம்பலம், மகத், டேனியல் அன்னி போப், ஜனனி ஐயர், மும்தாஜ், ரித்விகா , வைஷ்ணவி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா என்எஸ்கே, சென்றாயன், தாடி பாலாஜி, நித்யா பாலாஜி என பலர் கலந்து கொண்டனர். இதில், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து 106 நாட்கள் வீட்டிற்குள் இருந்து டைட்டிலை வென்றவர் தான் நடிகை ரித்விகா.

Riythvika Bigg boss engagement
Photo Credit:

நடிகை ரித்விகா: இவர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அதர்வா நடித்த பரதேசி படத்தில், ரித்விகா முக்கியமான வேடத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். பரதேசி கொடுத்த அறிமுகத்தைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார். மெட்ராஸ் திரைப்படம் ரித்விகாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்ததோடு திருப்புமுனை படமாகவும் அமைந்தது. இவர், கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் ரித்விகா நடித்துள்ளார்.

விரைவில் டும் டும் டும்: கடந்த ஆண்டு ரித்விகாவின் நடிப்பில் யாவரும் வல்லவரே, தீபாவளி போனஸ் என்ற படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நவீன் சந்திரா நடித்த 'லெவன்' திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு மட்டுமில்லாமல், அதர்வா நடித்த டிஎன்ஏ படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிச்சயதார்த்தம் நடந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கேப்ஷனாக "கைத்தலம் பற்ற" என பதிவிட்டுள்ளார். ஆனால், மாப்பிள்ளை நடிகரா... நண்பரா... தொழிலதிபரா என எந்த விஷயத்தையும் ரித்விகா அதில் பதிவிடவில்லை. நிச்சயம் நடந்து உள்ளதை மட்டும் போட்டு, மாப்பிள்ளை யார் என்பதை சஸ்பென்சாக வைத்து இருக்கிறார் ரித்விகா. அவருக்கு இணையத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X