ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்க போல.. இந்த கேள்விலாம் கேட்காதீங்க.. வேண்டுகோளோடு வாழ்த்து சொன்ன நடிகை!
சென்னை: நடிகை ரித்விகா வித்தியாசமான முறையில் வேண்டுகோளோடு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
Recommended Video
நடிகை ரித்விகா பாலாவின் பரதேசி படத்தின் மூலம் அறிமுகமானார். மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்த அவர் நடிப்பில் வெளுத்து வாங்கினார்.
தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் இணைந்த அவர், கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தப் படங்களிலும் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

டைட்டில் வின்னர்
பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்ற அவர் டைட்டில் வின்னர் ஆனார். ஆனாலும் ரித்விகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

போட்டோ ஷுட்
இதனால் அவரை ஸ்க்ரீனில் பார்ப்பதும் அரிதாகவே உள்ளது. தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

கவர்ச்சிக்கு ரெடி
கிளாமர் காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என்று புரிந்து கொண்ட ரித்விகா தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷுட்டுகளை நடத்தி, கவர்ச்சிக்கு ரெடி என க்ரீன் சிக்னல் காட்டி வருகிறார்.
கேட்காதீங்க
இந்நிலையில் புத்தாண்டையொட்டி வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ரித்விகா. இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, எப்போ தான் கல்யாணம் பண்ண போறீங்க? எப்ப தான் உங்க படம் ரிலீஸ் ஆகும்? என்ன படம் தான் இப்ப பண்றீங்க? ஒரு படம் கூட இப்ப பண்ணலயா? இந்த மாதிரி கேள்விகளை 2020ல் தவிர்ப்பது என வாக்குறுதி எடுத்து 2020ஐ சந்தோசமாக செலிபிரேட் பண்ணுவோம் என தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டிருக்கீங்க..
இதனை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல என பதில் தெரிவித்து வருகின்றனர். பதிலுக்கு இந்த ஆண்டாவது அதிக படங்கள் அமையட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
என்ன பண்றீங்கனு
அப்படியே இந்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்கிட்டயும்
"தம்பி இப்ப என்ன தான் பண்றீங்கனு" கேட்க கூடாதுன்னு நம்ம சொந்தக்காரங்கள ஒரு ரிசொல்யூஷன் எடுக்க சொல்லனும் என்கிறார் இந்த நெட்டிசன்.
புத்தி வரதில்ல
நல்லா உறைக்கற மாதிரி கேளுங்க மேடம். எவ்வளவு சொன்னாலும் புத்தி வரதில்ல.அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னா யாரும் கேட்கறதில்ல. சரி அதெல்லாம் இருக்கட்டும்,மேடம் எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்க?? என நக்கலடிக்கிறார் இவர்.
நல்லா இருக்கும்
என்னென்ன கேள்விகள் கேட்கலாம். அதையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும் என்கிறார் இவர்.
ரித்விகாவுக்கு வந்த சோதனை
இதென்னடா ரித்விகாவுக்கு வந்த சோதனை என்கிறார் இவர்.
அவங்கக்கிட்ட கேளுங்க
ஏதோ ஒரே வருஷத்துக்கு இவ்வளவு வருத்தப்படாதீங்க. இதை எப்படி எதிர்கொள்கிறது என்பதை சிம்புக்கிட்ட இருந்தும் சல்மான்கான்கிட்ட இருந்தும் கத்துக்கோங்க என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











