24 குழந்தைங்க பெத்துக்கணும்.. உலக சாதனையில் நாங்கதான்.. நடிகை ரோஜா பேட்டி
சென்னை: 90களில் தென்னிந்தியாவையே கலக்கியவர் ரோஜா. சினிமாவையும் தாண்டி அரசியலிலும் கால் பதித்து வெற்றிநடை போட்டு வருகிறார். இவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் ரோஜா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஆசை இதுதான் என வெளிப்படையாக தெரிவித்தார். அதற்கு ஆர்.கே.செல்வமணியும் ஆசைப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அப்படி என்ன ஆசை என்பதை இதில் காணலாம்.
நடிகை ரோஜாவும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் காதலித்து திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் இதுவரை எந்தவித சண்டையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். அரசியலில் பல ஏற்ற இரக்கங்களை கண்டாலும் குடும்பத்தில் எந்த சிக்கலையும் சந்திக்காத தம்பதி என பெயர் எடுத்திருக்கிறார்கள். 90களில் கனவுக்கன்னியாக இருந்த ரோஜா இன்று பல நடிகைகளுக்கு ரோல் மாடலாகவும் விளங்குகிறார்.

பொண்டாட்டியிடம் தோல்வி: சமீபத்தில் மேடை ஒன்றில் குடும்ப உறவுகளை பற்றியும் ஆர்.கே.செல்வமணி குறித்து பேசிய ரோஜா மனம் நெகிழ்ந்து பேசினார். அதில், நான் தான் எப்போதும் அவரிடம் சண்டை போடுவேன். செல்வமணி சார் எப்பவுமே சண்டை போட மாட்டார். கோபம் வந்தால் கூட சீரியஸா ரூமுக்குள்ள போய் கதவை மூடிப்பார். கோபம் குறைந்தபிறகுதான் வெளியே வருவார். ஏன்னா, அவர் திட்டினா நான் அழுவேன். அப்புறம் என்னை சமாதானம் படுத்தனும். இதெல்லாம் எதுக்குன்னு அவருக்கு தெரியும். வாழ்க்கையில ஜெயிக்கணும்னு நினைச்சா பொண்டாட்டி கிட்ட தோத்துப் போங்க. பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டா வீட்டுல சண்டை போட்டுக்கிட்டே தான் இருக்கணும். வெளியே போய் ஜெயிக்க முடியாது என ரோஜா தெரிவித்தார். இதை கேட்டு அரங்கமே அதிர்ந்தது. பெண்களிடம் வீட்டில் தான் தோற்க முடியும் வெளியில் நீங்க ராஜாதான் என தெரிவித்தார். அவரது பதிலை பார்த்து சக தொகுப்பாளர்களும் வியந்து போனார்கள்.
24 குழந்தை பெத்துக்கணும்: பிரபல யூடியூப் சேனலில் ஆர்.கே.செல்வமணியும், ரோஜாவும் இணைந்து பேட்டி அளித்தனர். அப்போது, எங்க ரெண்டு பேருக்கும் பெரிய ஆசை எல்லாம் கிடையாது. காதலிக்கும் போது கூட எங்க இருவரது வீட்டிலும் நான்தான் மருமகன் ரோஜா தான் மருமகள் என முடிவு செய்துவிட்டார்கள். அந்த அளவிற்கு அன்போடும் இணக்கமாக இருந்தோம். நாங்க 2 பேரும் காதலிக்கும் போது 24 குழந்தைங்க பெத்துக்கணும். அதை உலக நாடுகள் போற்றும் வகையில் சாதனை படைத்து வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டோம் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். இதை கேட்டு தொகுப்பாளினி என்னது 24 குழந்தைங்களா என வியப்புடன் பார்த்தார். அதற்கு ரோஜா ஆமா நாம எதற்கு கல்யாணம் பண்ணிக்கனும் குழந்தை ரொம்ப முக்கியமானது அப்படித்தான் பேசிக்கொண்டோம் என ரோஜாவும் தெரிவித்தார்.

குழந்தை பிறக்காது சொல்லிட்டாங்க: பின்னர் பேசிய ரோஜா, நான் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது உடலில் சின்ன பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரொம்ப அவஸ்தை பட்டேன். அப்போது இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. காதலித்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் எங்க ஃபேமிலி டாக்டர் வந்து செல்வமணியிடம் ரோஜாவுக்கு குழந்தை பிறக்காது சொல்லிட்டாங்க. பிறப்பதற்கு 50 சதவீதம் தான் ஷான்ஸ் இருக்கு என கூறியுள்ளார். இதை கேட்டு ஆர்.கே.செல்வமணி மனமுடைந்து போனார். ஆனால், என்னிடம் அவரும் சொல்லலை, அந்த டாக்டரும் சொல்லலை. அதன் பிறகு எங்க 2 பேருக்கும் திருமணம் முடிந்து 2 வருடத்தில் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதை எங்கள் வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷத்தில் கொண்டாடியதாக ரோஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடவுள் கொடுத்த கிஃப்ட்: பின்னர், நான் கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்த டாக்டர் எனக்கு போன் பண்ணி நீ கர்ப்பமாக இருப்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என தெரிவித்தார். அதை கேட்டு எனக்கு ஒன்னும் புரியலை எதுக்கு டாக்டர் இப்படி சொல்றிங்க என்று கேட்டபோது தான் உண்மை தெரியவந்தது. நான் அழுதுவிட்டேன். முதலில் பெண் குழந்தை பிறந்த பிறகு அது கடவுள் கொடுத்த கிஃப்ட் என்று தான் நினைத்துகொண்டேன். அந்த மேஜிக் என்னால் மறக்க முடியாது. குழந்தை பொறக்காது சொன்னாங்க இப்ப ஒரு குழந்தைக்கு தாயானேன். அந்த குழந்தைக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் நல்லபடியாக வளர்க்க வேண்டும். கடவுள் கொடுத்த வரமாக நான் பார்த்தேன். நாம் செய்த நல்லது தான் இதையெல்லாம் நடத்தி வைக்கிறது என புரிந்துகொண்டேன் என கண்ணீருடன் ரோஜா தெரிவித்தார்.

வருத்தம்: அப்போது இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது, ரோஜாவுக்கு குழந்தை பிறக்காதுன்னு டாக்டர் சொன்னதும் அதிர்ச்சியா இருந்துச்சு. என்ன நடக்குதோ நடக்கட்டும் என விட்டுட்டேன். என்னடா 24 குழந்தைங்க பெத்துக்கணும் ஆசைப்பட்டோம். ஒரு குழந்தை கூட பிறக்காது சொல்லவும் மனம் உடைந்து போனேன். ரோஜாகிட்ட சொல்லாம மறைச்சுட்டேன். ஆனால், குழந்தை இல்லைன்னா திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு ரோஜா வந்திடுவாங்க. அதனால் நான் சொல்லவில்லை. எங்களுக்கு 2001ல் கல்யாணம் நடந்தது. முதலில் மகள் 2003ல் பிறக்கிறாள். என்னால் நம்ப முடியலை பயங்கர மிராக்கிலாக இருந்தது. நம்மல மீறி ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்தேன் என ஆர்.கே.செல்வமணி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
2வது மகன்: முதல் மகள் பிறந்த பிறகு 2வது முறையாக கருவுற்ற போது ரொம்ப வலியை சந்தித்தேன். மறக்க முடியாத சோகம் அது. அந்த நேரத்தில் நான் அரசியலில் இருக்கிறேன். மொட்டை வெயிலில் ஊர் ஊராக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்கிறேன். கடுமையான வெயிலில் நடு ரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடந்தபோது எதிர்பாராத வகையில் உடலில் ஒரு மாற்றம் நடந்தது. உடனே என்னை மருத்துவமனையில் சேர்த்தனர். எனக்கு ரத்தப்போக்கு அதிகமாகுது நிற்கவில்லை. ரொம்ப வலியாக இருந்தது. என்னை அங்கிருந்து கஷ்டப்பட்டு மருத்துவர்கள் நண்பர்கள் பார்த்துக்கிட்டாங்க அப்படி தான் 2வது மகன் இந்த பூமிக்கு வந்தான் என ரோஜா கண்ணீரோடு தெரிவித்தார்.
நோ கண்டீஷன்: பிறகு கண்ணீரோடு பேட்டி அளித்த ரோஜா, சினிமா, அரசியல் இரண்டிலும் எந்த சாதனை படைத்தாலும் குழந்தை என்று வந்த போது நான் எந்தவித கண்டீசனும் போடுவதில்லை. அவர்கள் எனக்கு வரமாக கிடைத்த கிஃப்ட். நல்லா பார்த்துக்கனும் மட்டுமே நினைத்தேன். அவர்கள் விருப்பத்திற்கு இருவரும் விட்டுவிட்டோம். என்ன படிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதை மட்டும் கேட்டு தெரிந்துகொள்வோம். நெகட்டிவான முடிவுகளுக்கு தள்ளும் அப்பா அம்மா நாங்க கிடையாது என ரோஜா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











