ரோஜா வீட்டில் விசேஷம்.. வேட்டி, சட்டையில் மாப்பிள்ளை போல இருக்காரே ரோஜா மகன்.. செம ஹேப்பி!
சென்னை: நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜா தனது மகனுடன் உகாதி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகையை ஆந்திரா மற்றும் தெலங்கானா மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர். கோலிவுட்டில் உள்ள தெலுங்கர்களும் உகாதி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு தெலுங்கில் வாழ்த்துக்களை காலை முதல் தெரிவித்து வருகின்றனர்.

தாய் கிழவி வெற்றிப் பெற்ற சந்தோஷத்தில் உள்ள நடிகை ராதிகா சரத்குமார் உகாதி வாழ்த்துக்களை காலையில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நடிகை ரோஜா உகாதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வேட்டி சட்டையில் மகன்: நடிகை ரோஜா இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். செல்வமணி, ரோஜா தம்பதியினருக்கு கிருஷ்ணா லோகித் என்கிற மகனும் அன்ஸுமாலிக்கா என்கிற மகளும் உள்ளனர். உகாதி பண்டிகையை முன்னிட்டு புதிதாக கட்டியுள்ள வீட்டில் தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களை நடிகை ரோஜா வெளியிட்டுள்ளார். வேட்டி, சட்டையில் புது மாப்பிள்ளை கணக்கா லோகித் ஜோராக போஸ் கொடுத்துள்ளார்.
உகாதி வாழ்த்து: திருப்பதியில் பிறந்து வளர்ந்த நடிகை ரோஜா தமிழில் பல படங்களில் நடித்தாலும் தனது அரசியலை ஆந்திராவிலேயே ஆரம்பித்து அமைச்சராகவும் மாறினார். முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரான ரோஜா சினிமாவுக்கு பெரிய பிரேக் விட்டு இருந்த நிலையில், மீண்டும் தற்போது நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். மேலும், தனது வாரிசுகளையும் சினிமாவில் களமிறக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உகாதி பண்டிகையை முன்னிட்டு மகனுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு உகாதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரோஜா. அவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











