தனுஷுக்கு கை கொடுத்த கருங்காலி.. ரோஜாவிற்கு கை கொடுக்குமா? செம்பு முருகன் திருக்கோவிலில் தரிசனம்!

சென்னை: நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் கருங்காலி மாலை அணிந்ததைத் தொடர்ந்து கருங்காலி மாலை அணிவது டிரெண்டானது. இதையடுத்து, எந்த நடிகரை பார்த்தாலும் கருங்காலி மாலை அணிந்து இருந்தார்கள். பின் கருங்காலி மாலை அணியும் டிரெண்ட் குறைந்து போனது. தற்போது மீண்டும் கருங்காலி மாலை அணிவது டிரெண்டாகி இருக்கும் நிலையில், ஆந்திர முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா, புகழ் பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் கருங்காலி மாலை வாங்கி அணிந்து சாமி தரிசனம் செய்தார்.

90 கால கட்டங்களில் தென்னிந்திய திரை உலகை கலக்கியவர் நடிகை ரோஜா. தெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணி இயக்கிய 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், சரத்குமார், மம்முட்டி, அர்ஜுன், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ஆந்திரா முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா இன்று திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலுக்கு வருகை புரிந்தார். முன்னதாக பாதாள செம்பு முருகன் வளாகத்தில் அமைந்துள்ள சங்கிலி கருப்பை தரிசனம் செய்துவிட்டு பின்னர் பாதாள செம்பு முருகனுக்கு 8 கருங்காலி மாலை சாற்றி நடிகை ரோஜாவும் கருங்காலி மாலை வாங்கி அணிந்து கொண்டார்.

Roja Temple

நடிகை ரோஜா: பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் சார்பாக நடிகை ரோஜாவிற்கும், அவரது மகனுக்கும் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், நடிகை ரோஜாவின் சார்பாக பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் சுமார் 2000 பேருக்கு அவரின் கரங்களினால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் இதனை பக்தர்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டனர். நடிகை ரோஜா பாதாள செம்பு முருகன் திருக்கோவிலுக்கு திடீரென சாமி தரிசனம் செய்ய வந்த காரணத்தால் பக்தர்களும் ரசிகர்களும் நடிகை ரோஜாவுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சாமி தரிசனம்: பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல், அனைருக்கும் இலவச தரிசனம் தான், சிறப்பு தரிசனம் கிடையாது, தட்டில் பணம் பெறுவது கிடையாது, உண்டியல் கிடையாது, கார் பார்க்கிங் இலவசம், இலவச கழிப்பறை இவை அனைத்தும் பாதாள செம்பு முருகன் திருக்கோவிலின் சிறப்பு அம்சமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X