பிரசாந்த் மாதிரி ஒரு அழகனை பார்த்தது இல்லை.. கறுப்பா இருந்தால் ரிஜெக்ட்.. ரோஜா சொன்ன சீக்ரெட்

சென்னை: செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. இன்று இந்திய அளவில் அரசியல்வாதியாக பிரபலம் அடைந்துள்ளார். இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டின் மருமகளாகவும் இருக்கிறார். இந்நிலையில், இயக்குநர் செல்வமணி - ரோஜா தங்களது சினிமா வாழ்க்கை குறித்து அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், இயக்குநர் பாரதிராஜா ரோஜாவை கிண்டலாக பேசியதையும் கூறியிருக்கிறார்.

ரஜினி, பிரபுதேவா, சத்யராஜ், முரளி, கார்த்திக், பிரபு ஆகிய ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் ரோஜா. ஆந்திராவை பூர்விமாகக் கொண்டவர், செம்பருத்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதன் பின்பு தென்னிந்திய சினிமாவில் புகழ் உச்சத்தை தொட்டார். தற்போது சினிமாவிற்கு பிரேக் கொடுத்து முழு நீள அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் ரோஜா. அதற்கு அவரது கணவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி உறுதுணையாக இருக்கிறார். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஹீரோயினாக அறிமுகம் ஆனதை நினைவுகூர்ந்தார் ரோஜா.

Actress Roja says she has never seen a handsome man like Prasanth

செம்பருத்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு: இயக்குநர் செல்வமணி அளித்த பேட்டியில், விஜயகாந்த் 100ஆவது படம் கேப்டன் பிரபாகரன் அதன் பிறகு புலன் விசாரணை படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய இயக்குநராக மாறிவிட்டேன். ஆனால், மீண்டும் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்க ஆப்சன் இருந்தாலும் மறுத்துவிட்டேன். செல்வமணி என்ற பெயர் பிரபலம் அடைந்துவிட்டது. அதை நிலைநாட்ட புதுமுக நடிகர்களை வைத்து படம் இயக்க முடிவு செய்தேன். அப்படித்தான் ரோஜா இந்த படத்திற்குள் வந்தார். ரோஜாவின் கண்களை பார்த்ததும் பிடித்துவிட்டது. கருப்பா இருந்தாலும் அவங்க தான் என் படத்துக்கு ஹீரோயின் என்பதை முடிவு செய்தேன் என செல்வமணி தெரிவித்தார்.

அப்போது பேசிய ரோஜா, "செல்வமணி சாரை பார்த்ததும் பயம் வந்து விட்டது. அவர் பெரிய இயக்குநராக இருந்தார். அப்போ பொண்ணுங்க வெள்ளையாக இருந்தால் ஹீரோயின் ஆகலாம். மும்பையில் இருந்துதான் அதிகம் ஹீரோயின் படத்தில் நடித்து வந்தார்கள். ஆனால், நான் ரொம்ப கறுப்பு, பொண்ணுங்க கறுப்பாக இருந்தால் ரிஜக்ட் தான். ஹீரோயின் ஆக முடியாது. வெள்ளையா இருந்தால் ஹீரோயின் தான் என்று தான் முடிவெடுப்பார்கள். அந்த மாதிரிதான் சினிமா உலகில் இருந்தன. ஆனால், அதன் பிறகு செம்பருத்தி படத்தில் நான்தான் ஹீரோயின் என செல்வமணி சார் தீர்க்கமாக இருந்தார். எங்க குடும்பத்தில் இருப்பவர்கள் இப்போதும் எங்களை கிண்டல் செய்வது, படத்திற்கு ஆடிசன் வந்தது மாதிரி இல்லை. அவங்க வாழ்க்கைக்கு ஆடிசன் பண்ணது மாதிரிதான் இருந்தது என கிண்டலாக பேசினர்" என ரோஜா சிரித்த படி கூறினார்.

Actress Roja says she has never seen a handsome man like Prasanth

மீன்காரிதான் ஹீரோயினா: பிறகு பேசிய இயக்குநர் செல்வமணி, செம்பருத்தி படத்தில் 17 ஹீரோயின்களை ஆடிசன் செய்து யாரும் ஒத்துவரவில்லை. பின்பு ரோஜா எனக்கு பிடித்துவிட்டது. ஆனால், கருப்பாக இருந்ததால் தயாரிப்பாளர்கள் தயங்கினர். பிறகு நடிகை ரம்யாகிருஷ்ணனிடம் பேசி ரோஜாவுக்கு மேக்கப் போட வைத்து சூட் பண்ண பிறகு தான் நம்பிக்கை வந்தது. ரோஜா பெரிய ஆர்டிஸ்டா வருவாங்க என்பது அப்போதே தெரியும். செம்பருத்தி படத்தில் ரோஜா மீனவ பொண்ணாக நடிக்க வேண்டும். இதை பார்த்து இயக்குநர் பாரதிராஜா என்னிடம் என்னய்யா மீன்காரி ஹீரோயினா என கிண்டலாக கேட்டார். ஆமா சார் மீனவ பொண்ணு மீன்காரி மாதிரிதான் இருப்பாங்க என்றேன்" என செல்வமணி தெரிவித்தார்.

மணிவண்ணன் கிண்டல்: ரோஜா அளித்த பேட்டியில் மணிவண்ணன் தன்னை கிண்டல் செய்ததாக தெரிவித்தார். அதில், செல்வா 2 படம் ஹிட் கொடுத்து 3ஆவது படம் இயக்கிய போது அவரது குருநாதர் மணிவண்ணன் பொன்னு கருப்பா இருக்கு அவங்கள ஹீரோயினா நடிக்க வைக்குற என கேட்டுள்ளார். ஆனால், இதுவரை மணிவண்ணன் சார் சொன்னதை செல்வமணி என்னிடம் கூறியது கிடையாது. மணிவண்ணன் சாருடன் இணைந்து படங்கள் நடித்த போது அவரே என்னிடம் இதை தெரிவித்தார். கறுப்பு என்றால் நடிக்க சான்ஸ் கிடைக்காது என்பது வருத்தம் தான். ஆனால், செல்வமணி மாதிரி ஒருவர் கணவராக கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெண்ணை மதிக்க தெரிந்தவர். அமைதியானவர் என ரோஜா தெரிவித்தார்.

Actress Roja says she has never seen a handsome man like Prasanth

விஜய்க்கு நன்றி: கேள்வி: கரு கருப்பாயி பாடல் ஹிட் ஆனதை பத்தி என்ன நினைக்கிறீங்க?
ரோஜா பதில்: நானும் பிரபுதேவாவும் கஸ்டப்பட்டு இந்த பாட்டிற்கு ஆடினோம். அப்போ இந்த பாட்டு இந்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. லியோ படத்தில் விஜய் இந்த பாட்டிற்கு டான்ஸ் ஆடியதை என்னிடம் காண்பித்தனர். இந்த பாட்டுக்கு பெரிய ரீச் கிடைத்தது. விஜய், லோகேஷ் கனகராஜ் ஆகிய 2 பேருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கரு கரு கருப்பாயி பாடல் முழுக்க கருப்பு நிறத்தை பற்றிதான் இருக்கும் அது எனக்காகவே எழுதியபோல் நினைத்திருக்கிறேன் என ரோஜா தெரிவித்தார்.

பிரசாந்த் செம அழகு: கேள்வி: செம்பருத்தி படத்தில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்தது எப்படி இருந்தது? இதற்கு பதில் அளித்த ரோஜா, இயக்குநர் செல்வமணி மற்றும் ரோஜாவும் பேட்டியளித்த தருணத்தில் நடிகர் பிரசாந்த் வீடியோ கால் மூலம் பேசி சர்ப்ரைஸ் செய்தார். இதன் பின்பு பேசிய ரோஜா, செம்பருத்தி படத்தில் நடிக்கும் போது பிரசாந்தை பார்த்து ஆச்சர்யமடைந்தேன். அப்படியொரு அழகா இருப்பாரு. ஒரு பையன் இந்த அளவுக்கு அழகா இருப்பானா என்று கூட யோசித்திருக்கிறேன். இதை அவரிடமே கேட்டுள்ளேன். இதுவரை இப்படி ஒரு அழகை பார்த்ததில்லை. ரொம்ப கலகலப்பாக ரோஜா பேசியிருக்கிறார்.

Actress Roja says she has never seen a handsome man like Prasanth

அழகை பற்றிய கருத்து: நான் எப்போது அழகை பற்றி கவலைப்பட்டது கிடையாது. அப்பா அம்மா கொடுத்த சிரிப்பு, அழகான கண்கள் இருக்கிறது. மேக்கப் போட்டால் வெள்ளையாக இருப்பேன். இதற்குமேல் என்ன இருக்கிறது என ரோஜா தெரிவித்தார். அதனால், யாராவது கறுப்பு என்று கூறினால் கூட ஆமா நான் கறுப்புதான் உங்களுக்கு இதில் பிரச்னை இருக்கிறதா என வெளிப்படையாக ரோஜா தெரிவித்தார். பின்பு பேசிய அவர், இயக்குநர் செல்வமணியை நினைத்து பெருமையாக இருக்கிறது. எனக்கு எப்போது சப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு. குடும் பொறுப்பு, இருவருக்கும் இருந்த கனவை நிறைவேறற வேண்டிய கடமைகளை முடித்து விட்டு திருமணம் செய்துகொண்டோம் என ரோஜா தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X