ஒரு நிமிஷம்.. தரையில் படுத்துக் கொண்டு நடிகை ரோஜா செய்த சேலஞ்ச்.. வைரல் வீடியோ!

சென்னை : நடிகை ரோஜா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

ஒரு நிமிஷம்.. தரையில் படுத்துக் கொண்டு நடிகை ரோஜா செய்த சேலஞ்ச்.. வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் பல ஹீரோயின்கள் தங்களின் திறமையை வைத்து பல படங்களில் நடித்து நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களை பெற்றுள்ளார்கள். இன்னும் பல ஹீரோயின்கள் தங்களின் நடிப்பை தாண்டி கவர்ச்சியிலும் பெயர் போனவர்கள். அப்படி 90களில் தனக்கென தனி முத்திரை பதித்த ஹீரோயின்களில் ஒருவர் ரோஜா. பல இளைஞர்களின் மனதை கொள்ளை யடித்த இவர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

 Actress roja workout video goes viral

அதன் பின் சரத்குமார் அவர்களின் சூரியன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றார். அழகான தோற்றம், மெல்லிய குரல் என 90களில் இளைஞர்களை கவரும் ஹீரோயினாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் பட்டையை கிளப்பி வந்தார்.

தமிழில் மஸ்தான மஸ்தானா. போன்ற பாடல்கள் மூலம் பெரிதும் பிரபலமானார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவரின் திரை பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த உன்னிடத்தில் என்னை தந்தேன் திரைப்படம். இன்று வரை அந்த படத்தில் வரும் 'ஏதோ ஒரு பாட்டு என காதில் கேட்கும்' என்ற பாடல் இன்றளவும் பலரிடையே பிரபலம்.

 Actress roja workout video goes viral

இப்படி பல வெற்றி படங்களில் நடித்த இவர் பொட்டு அம்மன் திரைப்படம் மூலம் தனது 100வது திரைபடத்தை நிறைவு செய்தார். அதன் பின் அரசு, வீரா, காவலன் போன்ற திரைப்டங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். தற்போது அரசியல் களத்தில் இருக்கும் இவர் சில ஆண்டுகளாக திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

தற்போது லாக் டவுன் காரணத்தால் பல பிரபலங்கள் தங்களின் வீட்டிலிருந்தபடியே போடோக்கள் வீடியோக்கள் என வெளியிடும் நிலையில். தற்போது ரோஜாவின் வீடியோ ஒன்று சமூக வலையதளங்களில் பரவலாய் பேசப்படுகிறது. அந்த வீடியோவில் கருப்பு மற்றும் பின்க் நிற உடை அணிந்து இரண்டு கைகளிலும் தம்புல்சை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்கிறார்.

 Actress roja workout video goes viral

பின், ஒரு நிமிட சேலன்ச் என்று கூறி படுத்தவாரு கைகளையும் கால்களையும் தரையில் வைத்து உடலை மட்டும் அப்படியே அல்லேக்காக தூக்கி ஒரு நிமிடம் அப்படியே இருக்கிறார். இதை செய்து முடிந்து விட்டு நான் என்னுடைய சேலஞ்சை செய்து முடிந்து விட்டேன் நீங்க என்றும் கொஞ்சும் தெலுங்கில் அழகாக கேட்கிறார் ரோஜா. இந்த சேலஞ்ச் வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X