Roshini haripriyan: விஜய் சேதுபதியுடன் இணைந்த ரோஷினி ஹரிப்பிரியன்.. முக்கியமான கேரக்டராம்!

சென்னை: விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது மூன்று படங்களில் ரிலீசான நிலையில் இந்த ஆண்டிலும் அவரது ஏஸ் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் கமிட்டானார்.

அடுத்தடுத்து அவரது நடிப்பில் ஏஸ், டிரெயின், காந்தி டாக்கீஸ் படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.

Vijay sethupathi Nithya menon Roshini haripriyan

நடிகர் விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த ஆண்டிலேயே விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த மூன்று படங்கள் ரிலீசானது. கடந்த ஆண்டு ஜனவரியிலேயே விஜய் சேதுபதி -கத்ரினா கையிப் கூட்டணியில் மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியானது. தொடர்ந்து விஜய் சேதுபதியின் 50வது படமாக மகாராஜா வெளியாகி ஏறக்குறைய 180 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்திருந்தது. சீனாவிலும் இந்தப் படம் வெளியாகி மாஸ் காட்டியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் விஜய் சேதுபதி -வெற்றிமாறன் கூட்டணியில் விடுதலை 2 படம் வெளியானது.

அடுத்தடுத்த படங்கள்: இந்த மூன்று படங்களும் விஜய் சேதுபதிக்கு மிகச்சிறப்பாக அமைந்த நிலையில் இந்த ஆண்டிலும் அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஏஸ், டிரெயின் மற்றும் காந்தி டாக்கீஸ் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் ஆன்ட்ரியாவுடன் விஜய் சேதுபதி கேமியோ கேரக்டரில் நடித்திருந்த பிசாசு 2 படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜுடனும் இணைந்து படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் சைலண்டாக நடந்த நிலையில் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக தற்போது படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியுடன் இணைந்த ரோஷினி: இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனனுடன் யோகிபாபு, செம்பன் வினோத், ஜோஸ், ரோஷினி ஹரிப்பிரியனும் இணைந்து லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகாத நிலையில் விரைவில் டைட்டில், பர்ஸ்ட் லுக், டீசர், டிரெயிலர் என அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முதல் முறையாக இணைந்துள்ளனர். இதனிடையே முன்னதாக நடிகர் சூரியுடன் இணைந்து கருடன் படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்த ரோஷினி ஹரிப்பிரியன் தற்போது விஜய் சேதுபதியின் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

சீரியல் டூ சினிமா: சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ரோஷினி ஹரிப்பிரியன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாரதி கண்ணம்மா கடந்த 2019ம் ஆண்டில் ஒளிபரப்பாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இதையடுத்து விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவர் சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஆண்டில் வெளியான கருடன் படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X