Rukmani Vasanth: சிவகார்த்திகேயனுடன் இணையும் ருக்மணி வசந்த்.. அட இவ்வளவு படங்கள் கைவசம் இருக்கா?

பெங்களூர்: சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்து கொண்டு வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் தற்போது எஸ்கே21 படம் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி 16ஆம் தேதி மாலை எஸ்கே 21 படத்தின் டைட்டில் லுக் மற்றும் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள எஸ்கே 23 படத்தின் பூஜையும் நேற்றைய தினம் போடப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தான் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் கமிட் ஆகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் போடப்பட்ட பூஜையில் இவர் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மிர்ணாள் தாகூர் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Actress Rukmani Vasanth upcoming tamil & Telungu lineups

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான படங்களை கமிட் செய்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். முன்னணி இயக்குனர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இவர் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான மாவீரன் படம் மிகச் சிறப்பாக இவருக்கு கை கொடுத்தது. படம் 100 கோடி கிளப்பில் இணையவில்லை என்ற போதிலும் அதை நெருங்கும் வகையில் படத்தின் வசூல் அமைந்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் பொங்கலைலொட்டி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது அயலான். சயின்ஸ் பிக்சன் கதையை மையமாகக் கொண்டு ரவிக்குமார் இயக்கத்தில் இந்த படம் வெளியானது.

எஸ்கே23 படம்: இந்தப் படமும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயரையும் வசூலையும் பெற்றுத் தந்துள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தையும் ரவிக்குமாரே இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னதாக அறிவித்த சிவகார்த்திகேயன், தன்னுடைய அதிகப்படியான உற்சாகத்தையும் பகிர்ந்திருந்தார். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவு தருவாயில் உள்ள நிலையில் படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

நடிகை ருக்மணி வசந்த்: இதனிடையே வரும் 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி முந்தைய தினம் மாலை எஸ்கே 21 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாக உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே அடுத்ததாக எஸ்கே 23 படத்திற்காக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இணைய உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் துப்பாக்கி படத்தைப் போல இந்த படம் உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ருக்மணி வசந்த் ஜோடி ஆகியுள்ளார்.

விஜய் சேதுபதி.. சிவகார்த்திகேயன்: கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ள ருக்மணி வசந்த், முன்னதாக விஜய் சேதுபதியின் 51 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கும் அவர் ஜோடியாகியுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது ருக்மணி வசந்த் இந்த கேரக்டரில் பிக்ஸ் ஆகியுள்ளதாகவும் நேற்றைய தினம் படத்தின் பூஜை நடந்த நிலையில் அதில் ருக்மணி வசந்த் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் Sapta Sagara Daache ello என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் ருக்மணி வசந்த்.

தெலுங்கிலும் அடுத்தடுத்த படங்கள்: விஜய் சேதுபதியின் 51வது படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார் ருக்மணி. தெலுங்கு. கன்னடம், தமிழ் ஆகிய தென்னிந்திய மொழிகளில் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அடுத்ததாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரவிதேஜா -அனுதீப் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திலும் நடிக்க ருக்மணி அணுகப்பட்டுள்ளார். விரைவில் இந்த படங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ருக்மணி வசந்த், தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். அடுத்தடுத்த இவரது பதிவுகள் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X