அது நான் இல்ல.. மெசேஜ் ஃபோன் வந்தா எடுக்காதீங்க..ருக்மணிக்கு வந்த பிரச்சனை என்ன தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் ருக்மணி வசந்த். அண்மையில் இவர் நடித்த காந்தாரா திரைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் இதயத்தில் இவரின் பெயரை பச்சைக்குத்தாக குறையாக இருக்கிறார்கள். தற்போது ருக்மணி வசந்த் ஒரு பிரச்சனையில் சிக்கி இருப்பதாக வருத்தப்பட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை ருக்மணி வசந்த். அந்த படத்தை தொடர்ந்து, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து, வெளியான காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியன் நாயகியாக மாறியிருப்பவர் ருக்மிணி வசந்த். காந்தாரா படத்தில் கனவல்லி கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திதிரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இவர் அடுத்ததாக ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Rukmini Vasanth Twitter

நடிகை ருக்மணி வசந்த்: இந்நிலையில் நடிகை ருக்மணி வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை ஷெர் செய்துள்ளார். அதில்,முக்கியமான எச்சரிக்கை & விழிப்புணர்வு செய்தி 9445893273 என்ற எண்ணைப் பயன்படுத்தும் ஒருவர் என்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து பல்வேறு நபர்களைத் தொடர்புகொள்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த எண் என்னுடையது இல்லை என்பதையும், அதிலிருந்து வரும் எந்த செய்திகளும் அல்லது அழைப்புகளும் முற்றிலும் போலியானவை என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தயவுசெய்து இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது ஈடுபடவோ வேண்டாம்.

அது நான் இல்லை: இந்த ஆள்மாறாட்டம் சைபர் குற்றத்தின் கீழ் வருகிறது, மேலும் இதுபோன்ற மோசடி மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்தவொரு தெளிவுபடுத்தலுக்கும் அல்லது சரிபார்ப்புக்கும், நீங்கள் நேரடியாக என்னை அல்லது எனது குழுவைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் அனைவருக்கும் நன்றி. ஆன்லைனில் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த பார்த்த ரசிகர்கள் செல்லத்தை ஏன்டா இப்படி பண்றீங்க என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X