Saanve Megghana: ஆண்டர்சனை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு மஜா பண்ணும் குடும்பஸ்தன் நடிகை.. க்யூட் வீடியோ!

சென்னை: கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற படம் குடும்பஸ்தன். இந்த படத்தின் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சான்வி மேக்னா. இவர் தமிழில் குறைந்த அளவிலான படங்களே நடித்திருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள க்யூட் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நடிகை சான்வி மேக்னா குடும்பஸ்தன் படத்தில் செம ஹோம்லியாக நடித்தார். மேலும் இந்த படம் முழுவதும் அவர் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தாலும், கிளைமாக்ஸ் மற்றும் ப்ரீ கிளைமாக்ஸில் இடம் பெற்றிருக்கும் அவரது காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் அவரது நடிப்பை தொடர்ந்து பாராட்டினார்கள். இந்த படத்தில் செம ஹோம்லியாக வந்த சான்வி மேக்னா இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து ஆல்பம் பாடலில் செம ஸ்டைலாக நடனம் ஆடி இருந்தார்.

Actress Saanve Megghana Shanre Her Cute Video With Pansy parrot Fans Likes Much
Photo Credit:

இளைஞர்கள்: சான்விக்கு இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம், அதுவும் அவரது சுருள் முடி, அழகான பெரிய பெரிய கண்கள், கவர்ந்திழுக்கும் சிரிப்பு என ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொள்ளு விட்டு வருகிறார்கள். இப்படி இருக்கையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் பஞ்சவர்ணக் கிளி ஒன்றை தனது தோளில் அமர வைத்துக் கொண்டு அதனுடன் அவர் உரையாடுவது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

க்யூட் வீடியோ: ஆண்டர்சன் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த பஞ்சவர்ணக் கிளியை தனது தோளில் அமர வைத்துக் கொண்டு, " உங்க பேர் என்ன? ஆண்டர்சனா...? ஆண்டர்சன் எப்படி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா? நீங்க சாப்பிடுங்க" என்று கொஞ்சிக் கொஞ்சி பேசி வருகிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, " நான் ரொம்பவும் டிஸ்டர்ப் பண்ணல ஆண்டர்சன், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. அப்புறம் நான் திரும்பவும் வரப் போகிறேன்" என்று கேப்ஷன் இட்டுள்ளார். அவரது இந்த க்யூட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். மேலும் சிலரோ நடிகையிடம் வழக்கம் போல ஜொள்ளு வடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X