நீச்சல் குளத்தில் கிளாமர் போட்டோஷூட்… அசத்தும் சதா !
சென்னை: நடிகை சதா நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏக்கபெருமூச்சு விட வைத்துள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி, விக்ரம், அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
தற்போது இவருக்கு கைவசம் எந்த படமும் இல்லாததால் பட வாய்ப்புக்காக கவர்ச்சியை கையில் எடுத்து கவர்ச்சி காட்டத் தொடங்கிவிட்டார் சதா.

குடும்பகுத்துவிளக்கு
ஜெயம் திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து அனைவரையும் வசியம் செய்தார் சதா. இந்த படத்தில் இவர் பேசிய 'போ' வசனமும் இவர் கையை தூக்கி பேசிய விதமும் இன்று வரை டிரெண்டிங்கில் இருக்கும் டைலாக்காகவே உள்ளது.

விக்ரமுடன்
இந்த திரைப்படத்தின் மூலமாக ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி கொண்டார் சதா. அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில், விக்ரமுடன் அன்னியன் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திலும் அம்சமான குடும்பப்பெண்ணாக நடித்திருப்பார்.

பிஸியாக
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் குறைந்ததால், டார்ச் லைட் என்ற மசாலா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவரின் இமெஜ் மொத்தமாக டேமேஜ் ஆகி விட்டது.

குடி பழக்கம்
சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன், சதா சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட காரணம் அவரது குடி பழக்கம் தான் என கூறியிருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட எப்போதும் சிகரெட்டுடனே சதா வலம் வருவார் என்றும், அவரது போதை பழக்கமே பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணமாக இருந்தது என்று ஒரு பரபரப்பான தகவலை கூறியிருந்தார்.

நீச்சல் குளத்தில்
இந்நிலையில், சதா நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் நீச்சல் உடையை அணிந்து கொண்டு கழுத்தளவு தண்ணீரில் வெயிலுக்கு இதமாக கூலிங் கிளாஸில் பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். வலைத்தளத்தில் வெளியான இந்த போட்டோ பலரின் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











