Sadha Cry: அச்சச்சோ அந்நியன் ஹீரோயினுக்கு பேரிழப்பு.. கண்ணீர் விட்டுக் கதறும் சதா.. என்ன ஆச்சு?
சென்னை: ஜெயம், திருப்பதி, அந்நியன், உன்னாலே உன்னாலே, டார்ச்லைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சதா.
சினிமாவை விட்டு விலகி இருக்கும் அவர் திடீரென லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டுக் கதறி அழுவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை சதா மும்பையில் நடத்தி வந்த தொழில் ஒன்று முடிவுக்கு வருவதாகக் கூறி அந்த லைவ் வீடியோவில் மனமுடைந்து அழுதுள்ளார்.

அந்நியன் நந்தினியை மறக்க முடியுமா?: ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் வெர்ஷனில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் சதா. போயா.. போ.. என அவர் கையை அப்படி நீட்டி சொல்லும் அழகுக்கே தனி ரசிகர்கள் உண்டு.
கவிதையே தெரியுமா? என பாடாத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த அந்நியன் படத்தில் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் ஹோம்லியாகவும் பாடல்களில் கண்ணும் கண்ணும் நோக்கியா கவர்ச்சியாகவும் நடித்து மெர்சல் காட்டிய சதாவை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள்.

டார்ச்லைட் படத்திற்கு பிறகு மாறிய வாழ்க்கை: சியான் விக்ரம் உடன் அந்நியன், அஜித் உடன் திருப்பதி, வினய் உடன் உன்னாலே உன்னாலே என டாப் ஹீரோயினாக வலம் வந்த சதா திடீரென மார்க்கெட் சரிந்த நிலையில், வடிவேலுவுக்கு ஜோடியாக எலி படத்தில் நடித்தார். ஆனால், அந்த படமும் படு தோல்வியடைந்தது.
அதன் பின்னர் பட வாய்ப்புகளே கிடைக்காத நிலையில், டார்ச்லைட் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் பிக் பாஸ் ரித்விகாவுடன் இணைந்து நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
2018ல் வெளியான அந்த படத்திற்கு பிறகு நடிகை சதா சினிமாவில் இருந்து மொத்தமாகவே விலகி விட்டார். அதன் பிறகு அவருக்கு எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
மும்பையில் பிசினஸ்: நடிகை சதா மும்பையில் Earthlings cafe நடத்தி வந்தார். மேலும், வைல்டு லைஃப் போட்டோகிராஃபியிலும் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார்.
லாபகரமாக சென்றுக் கொண்டிருந்த அந்த எர்த்லிங்ஸ் கஃபே இந்த மாதத்துடன் மூடப் போகிறேன் என நடிகை சதா சமீபத்தில் லைவ் வீடியோ ஒன்றில் சொல்லி கண்ணீர் விட்டுள்ளார்.
கலங்கி அழுத சதா: மும்பை ரசிகர்களுக்கு ரொம்பவே ஃபேவரைட்டான எர்த்லிங்ஸ் கஃபேவை நடிகை சதா இந்த மாதம் மூடப் போவதாக கண்ணீர் விட்டு அழுது புலம்பிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
அந்த இடத்தின் உரிமையாளர் கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், வேறு வழியில்லாமல் கடையை மூடப் போகிறேன் என சதா கூறியுள்ளார்.
அந்த கடையை முற்றிலுமாக மூடும் முடிவை மாற்றுங்கள் சதா என்றும் வேறு ஒரு இடத்திற்கு மாற்றுங்கள், நாங்கள் கண்டிப்பாக வந்து சாப்பிடுவோம். உங்கள் கஃபேவின் ருசி வேறலெவல், எர்த்லிங்ஸ் கஃபேவை முற்றிலுமாக மூடிடாதீங்க என நடிகை சதாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று வேறு இடத்துக்கு கஃபேவை மாற்றுவாரா? அல்லது நிதி நெருக்கடி காரணமாக மூடிவிடப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











